80களில் சிரிக்க வைத்த பிந்துகோஸ் இப்போது பரிதாப நிலையில்!. அடப்பாவமே!...

by Rohini |
bindhughosh
X

களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகம்: 80களில் ரஜினி ,கமல், சத்யராஜ், பிரபு என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகையாக நடித்து பல பேரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை பிந்து கோஸ். இவர் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. இந்த படத்தில் கமலஹாசன் உடன் சேர்ந்து குழு நடனமாக ஒரு பாடலில் நடனமாடி இருக்கிறார். நடன இயக்குனராகவும் அவதாரம் எடுத்தவர். அதிலிருந்து பல படங்களில் குழு நடனங்களில் இடம்பெற்றார் பிந்துகோஸ். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார் .

ஆளே அடையாளம் தெரியவில்லை: இவர் நடித்து மிகவும் பிரபலமான திரைப்படமாக கோழி கூவுவது ,தூங்காதே தம்பி தூங்காதே, சூரக்கோட்டை சிங்கக்குட்டி, டௌரி கல்யாணம் போன்ற படங்களை குறிப்பிடலாம். இடையில் இவரது உடல்நிலை சரியில்லாமல் போக சினிமாவை விட்டு அதன் பிறகு நாடகங்களில் நடிக்க தொடங்கினார். இப்போது அவர் தோற்றமே மாறி யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மாறி இருக்கிறார் .அவருக்கு என்ன ஆனது என்பதை பற்றி அவரே இப்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

உடம்பில் இத்தனை பிரச்சினையா? : சினிமாவை விட்டு விலகி 40 வருடங்கள் ஆகிவிட்டதாம். உடல்நிலை சரியில்லாமல் போகவே தான் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று ஆபரேஷன்கள் செய்திருக்கிறாராம் மூட்டு வலி ,இதயத்தில் பிரச்சனை, சுகர் பிரச்சனை, பிபி பிரச்சனை என அவரது உடலில் பல தொந்தரவுகள் இருப்பதாக கூறினார் .அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் திருமணம் ஆகி ஹைதராபாத்தில் இருக்கிறார். இரண்டாவது மகன் இப்போது இவருடன் தான் இருக்கிறார்.

அனாதையாக விட்ட மூத்த மகன்: மூத்த மகன் செல்வாக்குடன் இருந்தாலும் ஆரம்பத்தில் இவருடைய மருத்துவ செலவுக்காக பணம் அனுப்பி வைத்துக் கொண்டு இருந்தாராம் .ஆனால் இடையில் எந்த ஒரு உதவியும் செய்யவில்லையாம். போன் பண்ணாலும் எடுப்பதே கிடையாதாம் .ஆரம்பத்தில் இவருக்கு ஒரு படத்தில் நடிக்க 2000, 3000 ரூபாய் தான் சம்பளமாம் .இதை வைத்துதான் சொந்த வீடு ஒன்று வாங்கியுள்ளார். கணவர் இறந்த பிறகு இவருடைய சொத்துக்கள் வீடு என எல்லாமே மகன்களுக்காக பிரித்துக் கொடுக்கப்பட்டு உறவினர்களும் இவருடைய சொத்தை சூறையாடி இப்போது 10 பைசா காசு இல்லாமல் வாடகை வீட்டில் தங்கியிருப்பதாக கூறினார்.


லாரன்ஸ் செய்த உதவி: இவருடைய இரண்டாவது மகனுக்கும் எந்த ஒரு வேலையும் கிடையாதாம். நடிகர் சங்கத்திடமும் உதவியை நாடியிருக்கிறார். ஆனால் எந்த உதவியும் பண்ணவில்லையாம். நடிகர் லாரன்ஸ் மட்டும் ஆரம்பத்தில் இவருடைய மருத்துவ செலவுக்காக 25,000 ரூபாய் கொடுத்து இருக்கிறார். அதன் பிறகும் உதவி கேட்டதற்கு அங்கிருந்தும் எந்த ஒரு பதிலும் வரவில்லையாம். அது மட்டுமல்ல விஷால் ஆரம்பத்தில் உதவி செய்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் .தன்னுடன் நடித்த எந்த நடிகருடனும் நான் தொடர்பில் இல்லை என்றும் அவர் கூறினார் .

ஏனெனில் அவருடைய கணவருக்கு இவர் யாரிடமும் பேசுவது பிடிக்காதாம். அதனால் யாரையும் எனக்கு தெரியாது என பிந்து கோஸ் கூறினார். அதனால் தான் இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலினிடம் இதைப் பற்றி கூறி அவரிடம் உதவி கேட்கத்தான் சேனலை அனுகினேன் என பிந்து கோஸ் கூறி இருக்கிறார். ரஜினி கமல் என இவர்கள் நடித்த ஏகப்பட்ட படங்களில் பிந்துகோஸ் நடித்திருக்கிறார் .ஆரம்பத்தில் 116 கிலோ எடையில் இருந்தார். இப்போது 45 கிலோவில்தான் இருக்கிறாராம் .தொடர் சர்ஜரி செய்ததால் தான் என்னுடைய எடை குறைந்து விட்டதாகவும் கூறி இருக்கிறார்.

குண்டாக இருந்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று இருந்த காலத்தில் தன்னுடைய உடல் எடையை வைத்தே பல படங்களில் வாய்ப்பு இவரை தேடி வந்தது. இவருடைய காமெடிக்கு என்று தனி ரசிகர் பட்டாளர்களே இருந்தனர். அவருடைய குழந்தைத்தனமான பேச்சும் சிரிப்பும் காமெடியும் இன்றுவரை யாராலும் மறக்க முடியாது. அப்படி இருந்தவருக்கா இந்த நிலைமை என இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story