விஜயகாந்த் பேச்சை கேட்கல! அதான் இப்படி இருக்கேன்.. புலம்பும் விஜய் பட நடிகை
விஜயகாந்த் எனும் உயர்ந்த மனிதன்:
சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி ஏராளமானவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவராக விஜயகாந்த் இருந்திருக்கிறார். அது அவர் செய்த உதவியாகட்டும் அவர் சொன்ன அறிவுரையாகட்டும் அதைப்படி நடந்து இன்று எத்தனையோ பேர் நல்ல நிலைமையை அடைந்திருக்கின்றனர். சில பேருக்கு அறிவுரை சொன்னால் பிடிக்காது. சில பேர் அதை ஏற்று நல்லபடியாக நடந்து தன் அடுத்த கட்ட நகர்வை நோக்கி பயணிக்க தொடங்குவார்கள். இத சொல்ல யாரும் இல்லையே என கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதைப் போல வாழ்க்கையில் கஷ்டத்தை பார்க்கும் பொழுது தான் சில பேருக்கு அது புரிய வரும்.
அப்படித்தான் ஒரு நடிகை விஜயகாந்த் அப்பவே எனக்கு சொன்னார். ஆனால் நான்தான் கேட்கவில்லை என புலம்பிய ஒரு வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்பட்டது. அதனால் தேமுதிக கட்சி சார்பாக அவருடைய நினைவு நாளை விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அவருடைய சமாதிக்கு மலர் தூவி மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர் .பல்வேறு கட்சி தலைவர்களும் அங்கு வந்து மரியாதை செலுத்தியதை நம்மால் பார்க்க முடிந்தது.
பொதுவான தலைவர்:
விஜயகாந்தை பொருத்தவரைக்கும் அவர் ஒரு பொதுவான தலைவர். அதனால் இன்று அத்தனை கட்சித் தலைவர்களும் ஒன்று சேர்ந்து அவருக்கு மரியாதை செலுத்த வந்தனர். இந்த நாளில் அவர் செய்த தியாகம், அவர் செய்த உதவி என சோசியல் மீடியாக்களின் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் நடிகை கௌசல்யா விஜயகாந்த் பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். வானத்தைப்போல படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக கௌசல்யா நடித்திருப்பார்.
நேருக்கு நேர்படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் கௌசல்யா. வானத்தைப்போல படத்தில் நடிக்கும் பொழுது விஜயகாந்துடன் இரண்டு நாட்கள் தான் பழகும் வாய்ப்பு கிடைத்ததாம். படப்பிடிப்பை முடித்து காரில் வரும் பொழுது திடீரென கௌசல்யாவின் கார் டயர் பஞ்சர் ஆகி நின்றிருக்கிறது .அவர் காரின் பின்னாடியே விஜயகாந்த் காரும் வர உடனே தன் காரை நிறுத்திய விஜயகாந்த் சரி செய்து அவரை திருப்பி அனுப்பிய பிறகு தான் இவர் புறப்பட்டு சென்றாராம்.
மனிதாபிமானமிக்க நடிகர்:
பொதுவாக நம் வேலை முடிந்து விட்டது. நம் வேலையை பார்ப்போம் என்று தான் எந்த ஒரு நடிகரும் நினைப்பார்கள். ஆனால் விஜயகாந்த் அன்று எனக்காக செய்தது ஒரு பெரிய உதவி. அதுவும் ஒரு பீக்கில் இருக்கும் நடிகர் என் காரை சரி செய்து என்னை வழி அனுப்பிய பிறகே அவர் புறப்பட்டு சென்றதைப் பார்க்கும்பொழுது அவருடைய மனிதாபிமானம் என்னை மிகவும் ஈர்த்தது என கௌசல்யா கூறினார்.
அது மட்டுமல்ல படப்பிடிப்பில் இவர் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டாராம். எப்பொழுதுமே அமைதியாக தான் இருப்பாராம். நான் ஒரு மூடி டைப் என கௌசல்யா கூறினார். அதனால் விஜயகாந்த் கௌசல்யாவை கவனித்துக் கொண்டிருக்க நேராக அவரிடம் வந்து இந்த மாதிரி இருக்காதே. நல்லா வெளிப்படையாக பேசி பழகு. அப்பொழுதுதான் உன்னுடைய வாழ்க்கையில் நீ அடுத்தடுத்து வளர்ச்சியை அடைய முடியும் என அறிவுரை கூறினாராம். ஆனால் அவர் பேச்சை நான் கேட்கவில்லை. கேட்டிருந்தால் ஒருவேளை இன்னும் நான் நன்றாக இருந்திருப்பேன் என கௌசல்யா கூறியிருக்கிறார்.