தூக்கம்தான் முக்கியம்..அம்மா இறந்தப்போகூட தூங்கிட்டேன்.. யாருப்பா அந்த நடிகை?

by Rohini |
lakshmi
X

ஒரு கேரக்டருக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்றால் ஒரு சில குறிப்பிட்ட நடிகர்களால் மட்டுமே முடியும். அந்த வகையில் நடிகைகளில் மிகவும் கை சேர்ந்தவர் நடிகை லட்சுமி. நடிப்பு ராட்சசி என்று இவரை சொல்லலாம். இந்த கதாபாத்திரத்தை இவரால் மட்டுமே தான் செய்ய முடியும் என்று பெயர் எடுப்பது மிகவும் கடினம். அதை அசால்ட் ஆக எடுத்தவர் லட்சுமி. தன்னுடைய குரலாலும் அழுகையாலும் முகபாவணையாலும் அந்த கேரக்டரை அப்படியே நம் கண் முன் நிறுத்துபவர்.

ஆரம்ப காலங்களில் இவருடைய படங்கள் சமூக கருத்துக்களை பேசுபவையாகவே இருந்திருக்கின்றன. அதனால்தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகையாகவும் இருந்திருக்கிறார் லட்சுமி. இப்போது தமிழை விட தெலுங்கில் தான் அதிக படங்களில் நடித்து வருகிறார் .குணச்சித்திர கதாபாத்திரங்களில் தெலுங்கில் பின்னி பெடலெடுத்து வருகிறார் லட்சுமி. இவரைப் பற்றி பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால் அதைப் பற்றி எதுவுமே இவர் கவலைப்பட்டதில்லை.

மிகவும் தைரியமான நடிகை. மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறார். இவருடைய முதல் படத்திலேயே இவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம். பொதுவாக நடிக்க வரும் எந்த ஒரு நடிகர் நடிகைகள் ஆனாலும் இன்னொரு நடிகரின் சாயல் கண்டிப்பாக அவருக்குள் இருக்கும். ஆனால் லட்சுமியை பொறுத்த வரைக்கும் எந்த ஒரு சாயலும் இல்லாமல் இந்த சினிமாவிற்குள் நுழைந்தார். அவருடைய வசன உச்சரிப்பு அனைவரையும் ஈர்த்தது.

இந்த நிலையில் லட்சுமி அவருடைய குணாதிசயங்கள் பற்றி சில தகவல்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதாவது தூக்கம் என்பது எனக்கு மிக மிக முக்கியம். அதுவும் இரவு 10 மணியிலிருந்து 10.30க்குள் எப்படியாவது நான் தூங்கி விட வேண்டும் என்று நினைப்பேன். அந்த நேரத்தில் என்ன நடந்தாலும் சரி. யாராவது இறந்து போனாலும் சரி .யாருக்காவது நெருங்கியவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலும் சரி .அந்த நேரத்தில் நான் எங்குமே போக மாட்டேன்.

அந்த அளவுக்கு தூக்கத்தை கெடுத்து மற்ற வேலைகளில் ஈடுபட வேண்டும் என்பதை நான் நினைக்கவே மாட்டேன். அதற்கு ஒரு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்ல வேண்டும் என்றால் என் அம்மா இறந்தப்போ கூட நான் தூங்க போகிறேன் என்று தான் சொன்னேன். என்னுடைய சகோதரிகள் இறந்த வீட்டுக்குள் தூங்கக் கூடாது என்று கூறினார்கள். அதற்கு நான் யாரு அம்மா வந்து சொன்னாங்களா தூங்க கூடாது என்று என்று கேட்டேன் .


என்னுடைய சித்தி மகள் பெரியம்மாவுக்காகவாவது கொஞ்ச நேரம் தூங்காமல் இரு என்று சொன்னாள். அதற்கு நான் உன் பெரியம்மா உனக்கு முக்கியம் என்றால் நீ தூங்காமல் இரு .என்னால் முடியாது என என் அம்மா காதல் அருகில் அம்மா தூங்கப்போகிறேன். என்னை பற்றி உனக்கு நன்றாக தெரியும் .அதனால் தூங்கிவிட்டு ஒரு இரண்டு மணி நேரம் கழித்து உன்னை வந்து பார்க்கிறேன் என சொல்லிவிட்டு சென்றேன் என அந்த பேட்டியில் லட்சுமி கூறி இருக்கிறார்.

Next Story