என் அப்பா இறந்தபோது நான் சிரிச்சேன்!.. சமந்தாவை ஃபீல் பண்ண வச்சிட்டாங்களே!...

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்தவர் இவர். முழுக்க முழுக்க தன்னுடைய திறமை மற்றும் நம்பிக்கையை வைத்து சினிமாவில் முன்னேறினார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். விஜயுடன் தெறி, மெர்சல் போன்ற படங்களிலும் நடித்தார். மேலும், தனுஷ், விஷால், சூர்யா, விஜய் சேதுபதி, விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
ஒருபக்கம் ஆந்திராவுக்கு போய் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார். தமிழை விட அதிக தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். அப்படி நடிக்கும்போது நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணமும் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களில் அவர்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

சமந்தா விவகாரத்து விவகாரம் சமூகவலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டது. ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட பலரும் சமந்தா மீதே தவறு இருப்பதாக விமர்சித்தனர். அவற்றில் சிலவற்றுக்கு மட்டும் ரியாக்ட் செய்தார் சமந்தா. ஒருபக்கம், தோல் நோயிலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில வருடங்களாக சமந்தா சினிமாவில் நடிக்கவில்லை. அவரின் உடல் நிலையே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சமந்தா ‘என் அப்பா இறந்தநாளில் ரசிகர்கள் என்னிடம் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டனர். அவர்களுக்கு முடியாது என சொல்ல எனக்கு மனம் வரவில்லை. அவர்களுடன் நின்று சிரித்து போஸ் கொடுத்தேன். அது எனக்கு மிகவும் கஷ்டமான தருணமாக இருந்தது’ என ஃபீல் பண்ணி பேசியிருக்கிறார்.