ரேவதி நடித்து புகழ்பெற்ற கேரக்டர்.. முதலில் நடிக்க வேண்டியது இந்த பிரபல பாடகியா?
நடிப்பின் இளவரசி: ஏய் இவங்களா ?எந்த கேரக்டருக்கும் ஏற்றவர் என்று சொல்லும் அளவுக்கு சினிமாவில் சில குறிப்பிட்ட நடிகைகளை மட்டுமே விரல் விட்டு எண்ண முடியும். அதில் முக்கியத்துவம் வாய்ந்தவர் நடிகை ரேவதி. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை உள்வாங்கிக் கொண்டு அந்த கேரக்டரின் தன்மையை அறிந்து அப்படியே வாழ்ந்து காட்டுபவர் ரேவதி. நல்ல திறமைசாலியான நடிகை. பரதம் நன்கு அறிந்தவர். இயக்குனராகவும் சில படங்களை இயக்கியவர். நடிகர் சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இப்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.
விவாகரத்துக்கு பிறகு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தும் வருவதாக செய்திகள் வெளியானது. சமீபகாலமாக தமிழில் ரேவதியை பார்க்க முடியவில்லை .ஆனால் ஹிந்தியில் அவருக்கான மார்க்கெட் சொல்லும் அளவுக்கு இருக்கிறது. மும்பையில் சில பட விழாக்களிலும் ரேவதியை காண முடிகிறது. தலைமுடி நரைத்து முழுவதும் வெளிர் நிற முடியுடன் தான் இப்போது காணப்படுகிறார் ரேவதி.
பாரதிகண்ட புதுமைப்பெண்: ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர். முன்னணி நடிகைகள் வரிசையில் இவருக்கு என ஒரு தனி இடம் ரசிகர்கள் கொடுத்திருந்தார்கள். இவர் நடிப்பில் வெளியான பல படங்களில் ஒரு சில படங்களை இன்றளவும் ரசிகர்கள் மறக்க முடியாது. அப்படிப்பட்ட படங்கள் ஆண்பாவம், மௌனராகம், புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்களை குறிப்பிடலாம். அதிலும் புதுமைப் பெண் படத்தில் உண்மையிலேயே பாரதி கண்ட புதுமை பெண்ணாகவே வாழ்ந்திருப்பார் ரேவதி.
அந்த படத்தில் நடிக்கும் பொழுது அவருக்கு சிறு வயது தான். இருந்தாலும் குடும்ப பொறுப்புகளை ஏற்று குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை சமாளித்து மாமியார் கொடுமை கணவர் கொடுமை என அனைத்து கொடுமைகளையும் கடந்து இதற்கு மேலேயும் இந்த வீட்டில் வாழனுமா? என்ற ஒரு தைரியமான முடிவு எடுத்து வீட்டை விட்டு வெளியேறுவார் ரேவதி. அந்த காட்சியில் அனைத்து பெண்களின் நாடி நரம்பும் துடிக்கும்.
பரதத்தில் கில்லாடி: அதற்கு அடுத்தபடியாக வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் .அதிலும் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுத்து திருமணம் ஆன முதல் நாளிலேயே ஓடையில் தன் முன்னே கணவர் தண்ணீரில் அடித்து செல்ல முதல் நாளிலேயே விதவைக் கோலம் ஏற்கும் கதாபாத்திரம். அதிலிருந்து படம் முழுக்க விதவை கதாபாத்திரத்திலேயே நடித்திருப்பார். அதிலும் அவருடைய பரதநாட்டியம் அந்தப் படத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது பிரபல நாட்டுப்புறப் பாடகியான அனிதா குப்புசாமி என்ற ஒரு தகவல் இப்போது வைரலாகி வருகின்றது. அனிதா குப்புசாமிக்கும் பரதநாட்டியம் தெரியுமாம். அவருடைய பரதநாட்டிய மாஸ்டரிடம்தான் வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு ஹீரோயினை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள் .
அப்போது அனிதா குப்புசாமியை அவருடைய மாஸ்டர் சிபாரிசு செய்ய அனிதா குப்புசாமி வீட்டில் பாடுவதற்கே அனுமதிக்காத நிலையில் எப்படி சினிமாவில் நடிக்க விடுவார்கள்? அதுவும் அனிதாவுக்கும் அப்போது நடிக்க ஆர்வம் இல்லையாம் .இதன் காரணமாகத்தான் வைதேகி காத்திருந்தாள் படத்தில் தன்னால் நடிக்க முடியவில்லை என ஒரு பேட்டியில் அனிதா குப்புசாமி கூறியிருக்கிறார்.