சூர்யாவும் இல்ல.. தனுஷும் இல்ல.. முதல்ல நான்தான்!.. அருண் விஜய் ஒப்பன்...

by MURUGAN |
சூர்யாவும் இல்ல.. தனுஷும் இல்ல.. முதல்ல நான்தான்!.. அருண் விஜய் ஒப்பன்...
X

Arun vijay: பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் விஜயகுமார். இவரின் குடும்பத்தில் பலரும் நடிக்க வந்தனர். அதில் மகன் அருண் விஜயும் அடக்கம். மிகவும் சின்ன வயதிலேயே சினிமாவுக்கு நடிக்க வந்தார். பல வருடங்களாக நடித்தும் அருண் விஜய்க்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.

அவருக்கு பின்னால் நடிக்க வந்தவர்கள் எல்லாம் சினிமாவில் பெரிய இடத்தை பிடித்தனர். அருண் விஜய்க்கு ஹிட் படம் அமையவில்லை. பல படங்களில் நடித்தும் நமக்கு ஒரு ஹிட் படம் அமையவில்லையே என பல வருடங்கள் கஷ்டப்பட்டார் அருண் விஜய். இத்தனைக்கும் நன்றாக நடனமாடுவார். நன்றாக சண்டை போடுவார்.

ஒருவழியாக கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லன் வாய்ப்பு வந்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார். இந்த படம் அருண் விஜய்க்கு முக்கிய படமாக அமைந்தது. அதன்பின் பல படங்களிலும் நடித்து சில ஹிட் படங்களை கொடுத்தார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் இவர் நடித்த தடம் படமும் பேசப்பட்டது. அதேசமயம் இவர் கஷ்டபட்டு நடித்த சில படங்கள் ரிலீஸே ஆகவில்லை. பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், ஊடகமொன்றில் பேசிய அருண் விஜய் ‘தடையற தாக்க ஹிட்டுக்கு பின் சினிமா விழாக்களில் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டேன். அதுக்கு முன்பெல்லாம் 7வது வரிசைதான் கிடைக்கும். பிளஸ் டூ முடிச்சவுடன் சினிமாவுக்கு வந்தது தப்பு என இப்போது தோன்றுகிறது. சூர்யா எனக்கு சீனியர். எனக்கும் கார்த்திக்கும் ஒரே வயசு. அவங்கெல்லாம் நடிக்க வந்தப்போ ஃபிரஸ்ஸா தெரிஞ்சாங்க. நான் சீக்கிரமே வந்ததால சரியான பக்குவம் இல்ல. மற்ற நடிகர்கள் பண்ணாத பல விஷயங்களுக்காக நான் ரொம்பவே மெனக்கெட்டேன். தமிழ் சினிமாவில் ஜனனம் படத்துக்காக முதலில் சிக்ஸ் பேக் வெச்சது நான்தான்னு சொன்னா நம்புவீங்களா?.. ஆனால் கிளைமேக்ஸில் சட்டையை கிழிச்சி றிஞ்சி நான் காட்டல. அதான் யாருக்கும் தெரியல’ என பேசியிருக்கிறார்.


ஒருவிழாவில் ‘சினிமாவில் முதல்ல சிக்ஸ் பேக் வச்சது சூர்யாதான்’ என சிவக்குமார் பேசியது ட்ரோலில் சிக்கியது. சிலரோ பொல்லாதவன் படத்தில் தனுஷ் வைத்தார்கள் என சொன்னார்கள். ஆனால், அதற்கு 3 வருடங்களுக்கு முன்பே அருண் விஜய் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.


Next Story