திடீர் அன்னை தெரசா!.. லதா ரஜினிகாந்தின் உண்மை முகம் இதுதான்!. பிரபலம் பகீர்!...

by MURUGAN |
latha rajinikanth
X

Latha rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் மனைவி சமீபத்தில் மத்திய அரசின் பாரத் சேவா அமைப்பு சார்பாக தான் பணியாற்றப்போவதாகவும், அனாதை குழந்தைகளுக்கு உதவி செய்யப்போவதாகவும் பேசியிருந்தார். பிளாட்பாம்களில், பாலத்தின் அடியில் தூங்குகிறார்கள். அவர்களுக்கு எங்கள் அமைப்பு உதவி செய்யும் என்கிற ரேஞ்சுக்கு பேசியிருந்தார்.

இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் பாலாஜி பிரபு ஊடகம் ஒன்றில் பேசிய போது லதா ரஜினிகாந்த சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது:


சில வருடங்களுக்கு முன்பு தான் பள்ளிக்கூடம் நடத்திய இடத்திற்கு வாடகை கொடுக்கவில்லை. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை போன்ற சர்ச்சைகளில் சிக்கிய லதா ரஜினிகாந்த் இப்போது திடீர் அன்னை தெரசாவாக மாறியது எப்படி என தெரியவில்லை. லதா ரஜினிகாந்த பற்றி இரண்டு சம்பவங்களை சொல்கிறேன்.

இதயம் பேசுகிறது என்கிற பத்திரிக்கையில் பத்மராஜன் என்கிற பத்திரிக்கையாளர் பல வருடங்கள் வேலை செய்தார். சினிமா பிரபலங்களையெல்லாம் பேட்டி எடுப்பார். அவருக்கு இதயத்தின் வால்வு பிரச்சனை ஏற்பட 8 லட்சம் செலவு செய்து ஆபரஷேன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால், அவ்வளவு பணம் அவரிடம் இல்லை என்பதால் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து சினிமா பிரபலங்களிடம் வசூல் பண்ணலாம் என சொன்னார்கள். ஆனால். 500, 1000, 3000 என வசூலானது.

அப்போது நெல்லை சுந்தர்ராஜன் என்பவர் நிறைய படங்களில் பி.ஆர்.ஓ-வாக பணியாற்றி வந்தார். சில ரஜினி படங்களிலும் வேலை செய்திருக்கிறார். அவருக்கு இது தெரியவர பத்மராஜனிடம் ‘ரஜினியை பார்த்தால் கண்டிப்பாக அவர் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை கொடுப்பார்’ என சொல்லி அவரை ரஜினியிடம் அழைத்து சென்று பத்மராஜனை அறிமுகம் செய்து அவரின் பிரச்சனையை சொல்லி உதவி கேட்டிருக்கிறார். ‘இவரை நான் பார்த்தது இல்லையே’ என ரஜினி சந்தேகமாக கேட்க ‘உங்களை சந்திக்கும் சூழ்நிலை அவருக்கு அமையவில்லை’ என சொல்லியிருக்கிறார். அதன்பின் உள்ளே போன ரஜினி ஒரு கவரை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்.


அதன்பின் அவர்கள் இருவரும் வெளியே வந்திருக்கிறார்கள். ‘அனேகமாக பிளாங் செக்காக இருக்கும். இங்கே பிரிக்க வேண்டாம். சற்று தூரம் போய் பிரித்து பார்ப்போம்’ என சுந்தர்ராஜன் சொல்லியிருக்கிறார். அதன்படியே அவர்கள் பிரித்து பார்த்தபோது அதில் ஒரே ஒரு 100 ரூபாய் நோட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியான பத்மராஜன் ‘இனிமேல் இந்த நிதி திரட்டும் வேலையை விட்டுவிடுங்கள். நான் சர்ஜரி செய்து கொள்ளப்போவதில்லை. மானத்தோடு வாழ்ந்தேன். மானத்தோடே சாகிறேன்’ என சொல்லிவிட்டு போய்விட்டார். சொல்லியபடியே சிகிச்சை எடுத்துக்கொள்ளாமலேயே அவர் இறந்து போனார். அனேகமாக அந்த பணத்தை லதா ரஜினிகாந்தே கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில், லதாவிடம் அனுமதி கேட்மால் ரஜினி எந்த உதவியும் செய்யமாட்டார்.

அதேபோல், காரில் போகும்போது டிரைவரிடம் பேசக்கூடாது என ரஜினிக்கே ரூல்ஸ் போட்டிருக்கிறார் லதா. ரஜினியின் வீட்டில் நிறைய கார் இருக்கிறது. நிறைய டிரைவர்களும் இருப்பார்கள். கார் தயாராக இருக்கும். ரஜினி வந்து ஏறியதும் அவர் சொல்லும் இடத்தில் இறக்கிவிட வேண்டும். ரஜினியிடம் ஒரு வார்த்தை கூட பேசவே கூடாது’ என டிரைவர்களுக்கும் கண்டிஷன் போட்டிருக்கிறார் லதா. அவரின் வீட்டில் பணிபுரியும் ஒரு டிரைவரின் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை செய்ய சில லட்சங்கள் தேவைப்பட்டது.

ரஜினி சார் உதவி செய்தார். மகளை காப்பாற்றிவிடலாம் என நினைத்த அந்த டிரைவர் கார் போய்க்கொண்டிருந்தபோது ரஜினியிடம் இதை சொல்லி உதவி கேட்டிருக்கிறார். அவர் தனது பாக்கெட்டில் இருந்த பணத்தை கொடுத்து ‘இதை வச்சிக்கோங்க’ என சொல்லியிருக்கிறார். அதில் ஏழாயிரம் ரூபாய் இருந்திருக்கிறது. ரஜினியிடம் எப்படி கேட்பது என தெரியாமல் டிரைவர் அமைதியாக இருந்துவிட்டார். இது எப்படியோ லதாவுக்கு தெரிந்துவிட்டது.

உடனே அந்த டிரைவரை அழைத்து சகட்டு மேனிக்கு திட்டிய அவர் ‘நான் அவ்வளவு சொல்லியும் நீ சாரிடம் பேசி பணம் வாங்கியிருக்கிறாய். இனிமேல் உனக்கு இங்கே வேலை இல்லை’ என சொல்லிவிட்டார். அந்த டிரைவரோ ‘மேடம். அந்த 7 ஆயிரத்தை கூட திருப்பி கொடுத்து விடுகிறேன். வேலையை விட்டு அனுப்பாதீர்கள்’ என கெஞ்சியும் லதா மனம் இறங்கவில்லை. இப்படிப்பட்ட லதாதான் இப்போது அன்னை தெரசா போல பேசி வருகிறார்’ என அவர் சொல்லியிருக்கிறார்.

Next Story