சில்க்கைப் போட்டு படமாக்கச் சொன்ன தயாரிப்பாளர்... ஆனா பாக்கியராஜ் ரூட்டே வேற லெவல்!

by Sankaran |   ( Updated:2025-02-19 16:31:20  )
bhagyaraj, silk
X

பாரதிராஜாவின் சீடர்களில் குறிப்பிடத்தக்கவர் பாக்கியராஜ். இவர் சில சமயங்களில் குருவையும் மிஞ்சிய சிஷ்யன் ஆகி இருக்கிறார். தனது குருவையே தான் இயக்கிய படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதுதான் தாவணிக்கனவுகள். பாக்கியராஜ் குறித்து பிரபல யூடியூபரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

நாடகம்: பாக்கியராஜ், ஆர்.சுந்தராஜன், மணிவண்ணன் 3 பேரும் கோவையில் நாடகம் நடிச்சிக்கிட்டு இருந்தாங்க. கோவை ராஜாதான் நாடகம் போட்டுக்கிட்டு இருந்தாரு. ஆர்.சுந்தரராஜனும், பாக்கியராஜியும் தெலுங்கு நல்ல பேசுவாங்க. அதனால ஆர்.சுந்தரராஜன் தான் பாக்கியராஜை நீ முதல்ல சினிமாவுல போய் சக்சஸ் ஆகு. அப்புறம் நான் வர்றேன்னாரு.

பாக்கியராஜிக்குக் கையெழுத்து அழகா இருக்கும். அப்படி இருந்தா பாரதிராஜா எடுத்துக்குவாரு. சுறுசுறுப்பா இருக்குறவங்க, டைரக்டரோட மன ஓட்டத்தைத் தெரிஞ்சவங்களைத் தான் இணை இயக்குனரா போடுவாரு. அந்த வகையில பாரதிராஜா கிட்ட 4 பேரு இருந்தாங்க.

துணை வசனகர்த்தா: அதனால அதுல துருதுருன்னு இருந்த பாக்கியராஜை துணை வசனகர்த்தாவா சேர்த்துக்கிட்டாரு. ராதிகாக்கு வசனம் சொல்லிக் கொடுத்தவர் பாக்கியராஜ் தான். பிரவீனா தெலுங்கைச் சேர்ந்தவர். அவருக்கு தமிழ் கத்துக் கொடுத்தவர் பாக்கியராஜ். அப்போ இருவருக்கும் லவ் வருது. நீ டைரக்டர் ஆகுன்னு பிரவீனா சொல்றாங்க.

முரண்பட்ட தலைப்பு: முதல் படம் சுவர் இல்லாத சித்திரங்கள். கிழக்கே போகும் ரயில் கதாநாயகன், கதாநாயகி புதுசு. முதல் படத்துலயே ரிஸ்க் எடுக்காரு. சுவர் இல்லாத சித்திரங்கள், மவுன கீதங்கள் என முரண்பட்ட தலைப்புகளை வைத்தாரு பாக்கியராஜ். முதன் முதலாக கிளைமாக்ஸை தவிர்த்து படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே முழு கதையையும் குமுதம் பத்திரிகையில் வெளியிட்டார். படம் சூப்பர்ஹிட் ஆனது.


கண்ணைத் தொறக்கணும் சாமி: அந்தப் படம் சூப்பர் சக்சஸ். அதை யாருமே செய்ததில்லை. முந்தானை முடிச்சு படத்துல அந்தப் பாட்டுக்கு சில்க்கைப் போடச் சொன்னாராம் தயாரிப்பாளர் சரவணன். ஆனா அவரு இல்லாமலேயே தன்னோட கதாநாயகி நடிக்கட்டும்னு தைரியமாக எடுத்தவர் பாக்கியராஜ். 'கண்ணைத் தொறக்கணும் சாமி' என்ற அந்தப் பாட்டு சில்க் இல்லாமலேயே அவர் நடித்ததை விட பிரமாதமா அமைஞ்சது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story