விஜய் போட்ட கவுண்டர்.. ஒட்டுமொத்த படக்குழுவே குபீர் என சிரித்த சம்பவம்.. அப்படி என்ன சொன்னாரு
ஆக்ஷன் ஹீரோ: பகவதி படத்தில் விஜய் அடித்த கவுண்டர் ஒட்டுமொத்த படக்குழுவையும் குபீரென சிரிக்க வைத்திருக்கிறது. இதைப்பற்றி படத்தின் இயக்குனரான வெங்கடேஷ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். விஜய்யை முதன் முதலில் ஒரு ஆக்சன் ஹீரோவாக மாற்றியது வெங்கடேஷ் தான். அதுவரை காதல் கதைகளை மையப்படுத்தியே படங்கள் வெளியாகி வந்தன.பகவதி படம் தான் அவரை ஒரு ஆக்சன் ஹீரோவாக மக்கள் முன்காட்டியது.
தம்பி கேரக்டருக்கு அலைந்த இயக்குனர்: அந்த படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிக்க எத்தனையோ பேரை ஆடிஷனுக்கு அழைத்து டெஸ்ட் செய்து இருக்கின்றனர் .ஆனால் இயக்குனர் வெங்கடேஷுக்கு யாரையுமே திருப்தி இல்லையாம். அதனால் ஆடிஷனை நிறுத்திவிட்டு சரி படப்பிடிப்பை தொடங்குவோம். தம்பி கேரக்டரை கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என கூறி படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவாவின் தம்பியா?: ஆனால் படப்பிடிப்பு நடக்கும் போது ஒவ்வொருவரையும் வெங்கடேஷ் பார்த்துக் கொண்டே இருப்பாராம். தம்பி கேரக்டருக்கு இவர் செட் ஆவாரா ஆக மாட்டாரா என நோட்டமிட்டு கொண்டே தான் இருப்பாராம். அப்போது கை கை வைக்கிறா பாடல் படமாக்கும் பொழுது ஸ்ரீகாந்த் தேவாவுக்கு பின்னாடி ஒருத்தர் கையில் கிட்டாருடன் உட்கார்ந்து இருப்பதை பார்த்திருக்கிறார் .
விஜய் படத்திலயா?: உடனே ஸ்ரீகாந்த் தேவாவிடம் யார் இவர் என கேட்க என்னுடைய சித்தப்பா மகன். இசை சம்மந்தப்பட்ட கல்வியை படித்துக் கொண்டிருக்கிறான் என கூறினாராம். உடனே அவரிடம் நடிக்கிறீயா என கேட்டிருக்கிறார் வெங்கடேஷ். அவருக்கு நடிப்பின் மீது ஆர்வமே கிடையாதாம் .அதனால் அய்யய்யோ நடிப்பா வேண்டவே வேண்டாம் என சொல்லி இருக்கிறார். இருந்தாலும் என்னுடன் படப்பிடிப்பிற்கு வந்து மட்டும் உட்காரு. ஆனால் நடிக்க வேண்டாம் .பிறகு என்றைக்காவது ஒருநாள் மீண்டும் நடிக்கிறீயா எனக் கேட்பேன்.
அப்போதும் முடியாது என சொன்னால் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன் என கூறி அவரை ஒவ்வொரு நாளும் தன்னுடனே படப்பிடிப்பில் வைத்துக் கொள்வாராம். விஜயிடமும் இவரை அறிமுகப்படுத்தி தினமும் படப்பிடிப்பிற்கு வரச் சொல்லி இருக்கிறேன். நீங்களும் இவருடன் கொஞ்சம் நெருக்கமாக பழகுங்கள் என விஜயிடம் கூறி இருக்கிறார். விஜயும் அதற்கு ஏற்ப இவரிடம் நெருக்கமாக பழக நான்காவது நாள் விஜய் அவர் தோள் மீது கை போட்டு பேசி இருப்பதை வெங்கடேஷ் பார்த்து இருக்கிறார்.
அப்பாடா இது போதும் என நினைத்து நேராக அவரிடம் இப்போது நடிக்கிறீயா என கேட்டிருக்கிறார். உடனே ஓகே என சொல்லி இருக்கிறார் .அவர்தான் ஜெய். பின் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே டேக்கில் நடிக்க வேண்டிய காட்சி. அதை அற்புதமாக நடித்து விட்டாராம். உடனே இயக்குனர் ஜெய்யின் பர்பாமன்ஸை பார்த்து கற்பூர புத்தி. உடனே புரிஞ்சுகிட்டான் என சொல்ல அதற்கு விஜய் ‘ஏது படம் முடியுற நேரத்திலேயா?’ என கேட்டாராம் .இதைக் கேட்டதும் ஜெய் உட்பட படப்பிடிப்பில் இருந்த அனைவருமே குபீரென சிரித்து விட்டார்களாம்.