இளையராஜாகிட்ட மரியாதை கிடைக்காது.. பாக்யராஜ் அனுபவித்த வேதனை

by Rohini |   ( Updated:2025-03-09 15:30:34  )
Ilaiyaraja
X

தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என புகழப்படுபவர் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ். இவருடைய இயக்கத்தில் பல படங்கள் வெள்ளி விழா கண்டிருக்கின்றன. இவருடைய படங்களை எப்போது பார்த்தாலும் ரசிகர்களுக்கு போர் அடிக்காத வகையில் இருக்கும். அந்த வகையில் இவருடைய திரைக்கதை ரசிகர்களை மிகவும் கனெக்ட் செய்யக் கூடியவையாக அமைந்திருக்கின்றன. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பாக்யராஜ்.

பாரதிராஜா இயக்கிய பல படங்களுக்கு கதையும் திரைக்கதையும் எழுதி இருக்கிறார் பாக்யராஜ். அவரிடம் இருந்து பிரிந்து சுவர் இல்லாத சித்திரம் என்ற படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குனராக மாறினார் பாக்யராஜ். அதனை தொடர்ந்து சுந்தரகாண்டம், அந்த ஏழு நாட்கள், ராசுக்குட்டி, இன்று போய் நாளை வா ,தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் என இவர் இயக்கிய அத்தனை படங்களும் மாபெரும் வெற்றி அடைந்தன.

அதனால் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறினார் பாக்யராஜ். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிப்பு இசையிலும் பட்டையை கிளப்பினார். இவர் நடித்து பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் பாக்கியராஜ். இவரை இசையமைப்பதற்கு முன்பு வரை இவர் இயக்கிய பல படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்து வந்தார்.

இருவருக்கும் இடையில் நடந்த ஒரு சின்ன கருத்து வேறுபாடு காரணமாக இளையராஜா பாக்யராஜ் படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்தார். இந்த நிலையில் ஏ வி எம் ராஜன் ஒரு பேட்டியில் முந்தானை முடிச்சு படத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி பேட்டியில் கூறி இருக்கிறார் .முந்தானை முடிச்சு படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. ஏவிஎம் நிறுவனம்தான் அந்த படத்தை தயாரித்தது .

அந்த படத்திற்கு டியூன் போடுவதற்காக இளையராஜா அவருடைய ரெக்கார்டிங் தியேட்டரில் காத்துக் கொண்டிருந்தாராம். அப்போது ஏவிஎம் ராஜனுக்கு தொலைபேசியில் நாளை இளையராஜா டியூன் போட இருக்கிறார். சரியாக பத்து மணிக்கு வந்து விடுங்கள் என உதவியாளர் சொன்னாராம். இதை அப்படியே பாக்யராஜுக்கும் சொல்லி இருக்கிறார்கள். நாளை இளையராஜா 10 மணியளவில் டியூன் போட இருக்கிறார். ஏவிஎம் ராஜனும் வர இருக்கிறார். அதனால் நீங்களும் சீக்கிரம் வந்து விடுங்கள் என அந்த உதவியாளர் பாக்யராஜிடம் கூறியிருக்கிறார் .

உடனே பாக்கியராஜ் தயவு செய்து ஏவிஎம் ராஜனை வர வேண்டாம் என சொல்லி விடுங்கள். அவர் வந்தால் இளையராஜாவிடம் எனக்கு மரியாதை இருக்காது. ஏனெனில் ஏவிஎம் ராஜன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்பார். ஒரு இயக்குனராக நான் சில கருத்துக்களை சொன்னாலும் அதை இளையராஜா கேட்க மாட்டார் .மதிக்கவும் மாட்டார். அதுவும் நான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக வந்தவன் .

அதனால் ஒரு உதவி இயக்குனர் சொல்லி நான் கேட்கவா என்ற நினைத்து கூட என்னை அவமானப்படுத்தி விடுவார், அதனால் ஏவிஎம் ராஜனை வர வேண்டாம் என சொல்லி விடுங்கள் என்று பாக்கியராஜ் அந்த உதவியாளரிடம் சொல்லி இருக்கிறார். இதை ஏவிஎம் ராஜனிடம் சொல்ல அதற்கு ஏவிஎம் ராஜனும் சரி அவர் படம். அவர் நல்லபடியாக எடுத்தால் நல்லது என இவர் போகவே இல்லையாம். ஆனாலும் படத்தில் அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது என ஒரு பேட்டியில் ஏவிஎம் ராஜன் கூறினார்.

Next Story