சில்க் ஸ்மிதாவுக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த பாரதிராஜா... அப்புறம் நடந்ததுதான் விசேஷம்..!
பாரதிராஜாவின் அறிமுகம் என்றால் பல நடிகைகளும் எளிதில் புகழ்பெற்று விடுகிறார்கள். அவரது அறிமுகத்தில் ரேவதி, ராதிகா, ராதா, விஜயசாந்தி போன்ற நடிகைகளைச் சொல்லலாம். நடிகர்களில் கார்த்திக் முக்கியமானவர்.
இவரது அறிமுகத்திற்காக பலரும் ஏங்கிக் கிடப்பதுண்டு. அந்த வகையில் நடிகை சில்க் ஸ்மிதா நடித்த முதல் படம் வண்டிச்சக்கரம். அந்தப் படத்தில் கவர்ச்சியில் கொஞ்சம் தூக்கலாக நடித்திருந்தார். அவரது 2வது படம் அலைகள் ஓய்வதில்லை. அந்தப் படத்தில் நல்ல ஒரு குணச்சித்திர வேடம். தியாகராஜனின் மனைவியாக நடித்து அசத்தினார்.
தொடர்ந்து பல படங்களில் இவரை கவர்ச்சிக்காக மட்டும் நடிக்க வைத்தனர். பல படங்களில் பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்து போவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிப்படங்களில் நடித்தார் சில்க். இவர் முதலில் பாரதிராஜாவின் படத்தில் தான் அறிமுகமாக இருந்தாராம்.
மலையாளத்தில் இவரது முதல் படம் ஒட்டபெட்டவர். இந்தப் படம் 1979ல் வெளியானது. அதே ஆண்டில் தமிழில் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் வெளியானது.
பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் பூ விற்கும் பெண் கேரக்டரில் முதலில் சில்க் ஸ்மிதா தான் நடிப்பதாக இருந்தாராம். பாரதிராஜாவே அவரைத் தான் தேர்வு செய்துள்ளார்.
அதன்பிறகு இவர் ரொம்ப சின்னப் பொண்ணு. கேரக்டருக்கு மேட்சா இருக்க மாட்டாருன்னு அவரை வேணாம்னு சொல்லி விட்டாராம். ஆனாலும் வேறு படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இவரது கண்கள் அவ்ளோ அழகு. அதுல ஒரு காந்தம் இருக்குன்னு அவரைப் பற்றி கமெண்ட்டும் அடித்துள்ளார் பாரதிராஜா.
அதன்பிறகு 1980ல் வினுச்சக்கரவர்த்தியின் தயாரிப்பில் வண்டிச்சக்கரம் படத்தில் நடித்தார். இந்தப்படத்திற்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்ததும் பாரதிராஜா அடுத்த படத்தில் அவரை நடிக்க வைப்பது என முடிவு எடுத்துள்ளார்.
அதன்படி 1981ல் தனது அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு தியாகராஜனின் மனைவியாக நடிக்க சில்க் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். அதனால் அவரது உதவியாளர்களான மனோபாலா மற்றும் மணிவண்ணனை அழைத்து சில்க் ஸ்மிதா எங்கிருந்தாலும் சரி.
அவர் தான் இந்தக் கேரக்டருக்குப் பொருத்தமானவர். அவரை அழைத்து வாங்கன்னு அனுப்பியுள்ளார். இருவரும் கஷ்டப்பட்டு சில்க் ஸ்மிதாவின் வீட்டைக் கண்டுபிடித்து பாரதிராஜாவின் படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.