எனக்கு இதெல்லாம் செட்டாகாது.. தனுஷ் நடிக்க மறுத்த திரைப்படம்

நடிப்பு அரக்கனாக தனுஷ்: தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீப காலமாக ஆக்சன் திரில்லர் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் .ஆரம்ப காலத்தில் இவர் நடித்து வெளியான திரைப்படங்கள் இளைஞர்களை மட்டுமே கவர்ந்து வந்தன. பேமிலி ஆடியன்ஸ் என இவருடைய படங்களை விரும்பவில்லை. அந்த அளவுக்கு காதல் ரொமான்டிக் இரட்டை அர்த்தமுள்ள வசனம் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவருடைய படங்களை அந்த அளவுக்கு விரும்பவில்லை .
முழுவதுமாக மாறியிருக்கும் தனுஷ்: ஆனால் அசுரன் கர்ணன் போன்ற திரைப்படங்களுக்கு பிறகு இவருடைய நடிப்பு அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. அஜித் விஜய் ரஜினி கமல் போன்றோர் எப்படி ஒரு கட்டத்திற்கு பிறகு காதல் ரொமான்ஸ் இவைகளை தவிர்த்து வந்தார்களோ அதைப்போல தனுஷும் தன்னுடைய படங்களில் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க தவிர்த்து வருகிறார் .அதுவே அவருக்கு பிளஸ் ஆக மாறியது. கதைக்கு மெருகேற்றும் விதமாக தன்னுடைய கதாபாத்திரம் எந்த அளவு இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
ஆக்ஷன் படம்: அதே சமயம் இளைஞர்களுக்கும் அந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதிலும் அக்கறை காட்டி வருகிறார். நடிப்பு அரக்கனாக இன்று மாறி இருக்கிறார் தனுஷ். தமிழ் தெலுங்கு ஹிந்தி ஹாலிவுட் என உலகளவில் பரிட்சயமான ஒரு நடிகராக மாறி இருக்கிறார். தற்போது இயக்கத்திலும் தன்னுடைய தனி பாணியை உருவாக்கி வருகிறார் தனுஷ். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ராயன். முழுக்க முழுக்க ஆக்சன் படமாக அமைந்த ராயன் திரைப்படம் ஓரளவு ரசிகர்களை திருப்தி படுத்தியது.
இயக்கத்திலும் டான்: அதற்கு அடுத்தபடியாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். அதுபோக இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ். அந்த படத்தில் அவரும் நடித்திருக்கிறார் .அருண் விஜய் வில்லனாக நடித்து வருகிறார் .இப்படி அடுத்தடுத்து தன்னுடைய லைன் அப்களை பிசியாக வைத்திருக்கும் தனுஷ் அவருடைய நடிப்பிற்கு தீனி போடும் விதமாக அமைந்த படம் புதுப்பேட்டை. அந்தப் படத்தில் முதலில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அதைப்பற்றி அவர் பகிர்ந்த ஒரு வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது .
டர்னிங் பாயிண்டாக அமைந்த படம்: செல்வராகவன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புதுப்பேட்டை. தமிழ் சினிமாவின் கலட் கிளாசிக் திரைப்படமாக இந்த படம் அமைந்தது. தனுஷுக்கு மற்றொரு புதிய அவதாரத்தை கொடுத்த படமும் ஆக இது இருந்தது. ஆனால் முதலில் இந்த கதையை கேட்ட உடனே தனுஷ் இதில் நான் நடிக்க மாட்டேன் என மறுத்திருக்கிறார். ஏனெனில் இதில் ஒரு டான் மாதிரியான கேரக்டர். நான் பார்ப்பதற்கு ஒல்லியாக சின்ன பையன் மாதிரி இருந்ததனால் எனக்கும் அந்த கேரக்டருக்கும் செட் ஆகாது என நினைத்து படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லி இருக்கிறார்.
இது செல்வராகவனுக்கும் சரி என தோன்றியிருக்கிறது. அதன் பிறகு பால குமாரன் என்ற ஒரு பிரபலம் தனுஷிடம் இன்று பெரிய பெரிய டான்களாக இருப்பவர்களை நீ பார்த்திருக்கிறாயா? பெரும்பாலும் அவர்கள் ஒல்லியாகத்தான் இருக்கிறார்கள். அதனால் துணிந்து நடி. இந்த படம் நிச்சயம் உனக்கு கை கொடுக்கும் என அறிவுரை கூறினாராம். அதன் பிறகு தான் இந்த படத்தில் நான் நடித்தேன். ஆனால் புதுப்பேட்டை திரைப்படம் இந்தளவு வரவேற்பை பெறும் என நான் நினைக்கவில்லை என தனுஷ் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.