ஆச்சி மனோரமாவுக்கே டைம் கொடுத்த இயக்குனர்... ஆனால் சில நிமிடங்களில் நடந்த அதிசயத்தைப் பாருங்க..!

by Sankaran |   ( Updated:2025-01-16 06:52:05  )
manorama
X

ஆயிரம் திரை கண்ட ஆச்சி என்று சொல்லும் அளவில் தமிழ்த்திரை உலகில் புகழ் பெற்றவர் மனோரமா. இவர் 1500 படங்களுக்கு மேல் நடித்து அசத்தியுள்ளார். இவ்வளவு ஏன் அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியுமே இவருடன் மேடை நாடகங்களில் நடித்துள்ளனர்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, என்டி.ராமராவ் என பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். 5 முதல் அமைச்சர்களுடன் நடித்த பெருமையும் இவரையேச் சேரும்.

தங்கவேலு ஜோடி: 1965ல் வல்லவனுக்கு வல்லவன் படத்தில் நகைச்சுவை நடிகர் தங்கவேலுவுடன் ஜோடியாக நடித்து அசத்தினார். இது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

அவரது கடைசி நேர்காணல் 2015ல் நடந்தது. அப்போது நெகிழ்ச்சியுடன் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் மனோரமா. இந்த வாழ்க்கையில் ஏதும் வருத்தம் உள்ளதா என்று ஆங்கர் கேட்க, எனக்கு வருத்தம் எதுவும் இல்லை. நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்.

மனோரமா விருப்பம்: அடுத்த பிறவியிலும் மனோரமாவாகவே பிறக்க விரும்புகிறேன் என்றாராம். ஆனால் இவரது சொந்த வாழ்க்கை தான் சோகமயமானது. 1964ல் தனது நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவரான எஸ்எம்.ராமநாதனைக் காதலித்து மணம் புரிந்தார். அடுத்த ரெண்டே ஆண்டுகளில் விவாகரத்து.

நடிகையர் திலகம்: இவர்களுக்கு பூபதி என்ற மகன் பிறந்தார். ஆனால் கடைசி வரை தனியாகவே வாழ்ந்தார். ஜெயலலிதா கூட மனோரமாவை 'நடிகையர் திலகம்' என்று புகழ்ந்தார். அவரைப் போல தமிழ்த்திரை உலகில் சாதனை புரிந்தவர்கள் யாருமே இல்லை என்றார்.

அந்தவகையில் சமீபத்தில் இயக்குனர் சிம்புதேவன் மனோரமாவைப் பற்றி நெகிழ்ச்சியான ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...


15 பக்க வசனம்: இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்துல 15 பக்கத்துக்கு எழுதுன வசனத்தை மனப்பாடம் பண்ணிக்க மனோரமா அம்மாகிட்ட கொடுத்து டைம் எடுத்துக்கோங்கன்னு சொன்னேன். ஆனா அவங்க பேப்பர்களை வாங்கிட்டு 2 டைம் படிச்சாங்க.

அப்படியே எக்ஸ்பிரஷனோடு சொன்னாங்க. நான் அசந்து போய் எப்படிம்மான்னு கேட்டேன். 1000 படத்துக்கு மேல பண்ணியாச்சு. இது கூட முடியலன்னா எப்படிப்பான்னு சிரிச்சாங்க. அவங்கள்லாம் நம்ம தமிழ்சினிமாவுல இருந்தது நமக்கு பெருமை என்கிறார் இம்சை அரசன் 23ம் புலிகேசி இயக்குனர் சிம்பு தேவன்.

Next Story