விக்ரம் இல்லைனாலும் அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் பண்ண ரெடி.. ஏன் இவ்ளோ கோபம்?

by Rohini |
vikram
X

சீயான் விக்ரம்: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம். சேது படத்தின் மூலம் சீயான் விக்ரம் என அவர் ரசிகர்களால் அடையாளப்படுத்தப்பட்டார். சேது படத்திற்கு முன்பு 20 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் சேது படம் தான் அவரை இந்த சினிமாவிற்கு அடையாளம் தந்து கொடுத்தது. அந்த படத்தின் வெற்றி விக்ரமை வேறொரு லெவலுக்கு கொண்டு சென்றது.

மாறாத ஸ்வாக்: தொடர்ந்து பல நல்ல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு விக்ரமுக்கு வர அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டார் விக்ரம். கமலுக்கு அடுத்தபடியாக கெட்டப்களை மாற்றி நடிப்பதில் ஒரு திறமையான நடிகர். அந்நியன், ஐ ,கோப்ரா போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். 50 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் அதே ஒரு ஸ்வாக்குடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

டயலாக் பேசத்தெரியாது: தற்போது வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றது. ஒரு ஆக்சன் ஹீரோவாக மாஸ் ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் விக்ரமுக்கு டயலாக் பேசத் தெரியாது என பிரபல இயக்குனர் ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகின்றது .

இதெல்லாம் டயலாக் டெலிவரியா?: ராஜகுமாரன் இயக்கத்தில் விக்ரம் சரத்குமார் குஷ்பூ தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விண்ணுக்கும் மண்ணுக்கும் .அந்தப் படத்தில் விக்ரமுக்கு பெரிய அளவில் டயலாக் இல்லை என்றாலும் ஒரு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை நான் பார்த்தேன் .அதில் விக்ரம் பேசியது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மனித உடலில் எத்தனை முட்கள் இருந்தாலும் மீன் ஒன்று சிக்குவது தூண்டில் முள்ளில் தான் என்ற ஒரு டயலாக்கை அவர் பேசியது ரசிகர்களுக்கு கூட புரிந்திருக்காது.


அது எப்பேர்பட்ட ஒரு டயலாக். அதை சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றிருப்பார் விக்ரம் .ஆனால் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் சரத்குமாரின் வசனம் ஒவ்வொன்றும் அனல் பறக்கும். அது தான் அந்த படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக இருந்தது. இப்போது கூட விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தின் இரண்டாம் பாகத்தை நான் எடுக்க தயாராக இருக்கிறேன். விக்ரம் நடிக்க வரவில்லை என்றாலும் சரத்குமார் குஷ்பூ கால்சீட் கிடைத்தாலே போதும். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நான் ரெடி என ராஜகுமாரன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். அது மட்டுமல்ல விக்ரமை வில்லேஜ் வரைக்கும் கொண்டு போய் சேர்த்தது நான்தான் என்றும் கூறியிருக்கிறார் ராஜகுமாரன்.

Next Story