படத்துல கெட்டவார்த்தை.. இளையராஜாவுக்கு பிடிக்கலனு தெரிஞ்சுபோச்சு.. கலக்கத்தில் இயக்குனர்
முதல் பட அறிமுகம்: தமிழ் சினிமாவில் அஜித், கார்த்திக் போன்ற நடிகர்களை வைத்து தரமான படங்களை கொடுத்து ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியவர் ராஜ்கபூர். சுந்தர் சி போல நகைச்சுவை மற்றும் கமெர்சியல் படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர். இவர் முதன் முதலில் பிரபுவை வைத்து தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
அந்தப் படத்தில் பிரபு மற்றும் கனகா லீடு ரோலில் நடித்திருந்தனர். அந்தப் படத்தின் துவக்கவிழா சிவாஜியால்தான் ஆரம்பிக்கப்பட்டதாம். படத்தின் முதல் ஷாட் ஒரு வண்டியில் கனகா உட்கார பிரபு அதை ஓட்டி செல்வது போல ஷாட். அதை கிளாப் அடித்து துவங்கிவைத்தவர் சிவாஜி தானாம். இந்த காட்சி பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டதாம். இந்த ஒரு காட்சியை அன்று ஒரு நாள் முழுவதும் 1000 அடிக்கு மேல் எடுத்துக் கொண்டிருந்தாராம் ராஜ்கபூர்.
இளையராஜாவின் சந்திப்பு: இதை பார்த்ததும் பிரபு மற்றும் ராம்குமாருக்கு ஒரே குழப்பம். படம் ஒழுங்கா எடுத்துவிடுவாரா என்ற சந்தேகமும் வர மறு நாளில் இருந்து முழுமூச்சாக ராஜ்கபூர் படத்தை எடுத்து 36 நாள்களில் 36 ரோலில் படத்தை எடுத்து முடித்துக் கொடுத்துவிட்டாராம். அதன் பிறகு படத்திற்கு இசை பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதனால் பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவை சந்திக்க சென்றிருக்கிறார்.
இளையராஜா கதையை கேட்க ஒன் லைன் கதையை சொல்லியிருக்கிறார் ராஜ்கபூர். பின் பாட்டுக்கான சூழ்நிலை என்ன என்றும் கேட்டு அறிந்து கொண்டாராம். இரண்டு மணி நேரத்தில் 6 பாடல்களை போட்டுக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. அவர் போட்டுக் கொடுத்த அந்த ஆறு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். பின் படத்திற்கான டபுள் பாஸிட்டிவ் பார்க்க இளையராஜா வந்திருக்கிறார்.
முகம் சுழித்த இளையராஜா: படம் ஆரம்பித்திலேயே கெட்ட வார்த்தை பேசப்பட இளையராஜாவிற்கு அது பிடிக்காத மாதிரி முகத்தை உச் கொட்டினாராம். படத்தை பார்த்துவிட்டு ராஜ்கபூரிடம் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாராம் இளையராஜா. உடனே ராஜ்கபூருக்கு மனதில் சின்ன பயம். ரீ ரிக்கார்டிங்கில் பிரச்சினை செய்வாரோ என்றெல்லாம் யோசித்திருக்கிறார். பின் ராஜ்கபூரை இளையராஜா அழைத்ததாக ஏவிஎம்மிற்கு வரவழைக்கப்பட்டார் ராஜ்கபூர்.
ராஜ்கபூரை பார்த்ததும் ‘என்னய்யா படம் எடுத்து வச்சிருக்க? அவ்வளவு அற்புதம். நாளைக்கு ரிக்கார்டிங் தியேட்டருக்கு வந்துவிடு’ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். இந்த மகிழ்ச்சியில் ராஜ்கபூர் இரவு முழுக்க ஒரே பாட்டிலுடன் கும்மாளத்தில் இருக்க விடியற்காலை 4 மணி வரைக்கும் நண்பர்களுடன் சந்தோஷமாக இருந்தாராம். பின் 6 மணியளவில் ரிக்கார்டிங் தியேட்டருக்கு போயிருக்கிறார் ராஜ்கபூர்.
அங்கு ஏஜிஎஸ் நிறுவனரை அழைத்து ‘உங்க அடுத்த படத்துக்கு இவர்தான் இயக்குனர்’என கூறி ஏஜிஎஸ் நிறுவனத்திடமிருந்து 50000 தொகையை அட்வான்ஸாக ராஜ்கபூருக்கு வாங்கிக் கொடுத்தாராம் இளையராஜா. இதை பற்றி ராஜ்கபூர் மிகவும் பெருமிதத்துடன் கூறினார்.