வேட்டையன் படத்துக்கு கள்ளிப்பால் கொடுத்துட்டாங்க... குமுறும் இயக்குனர்

by Sankaran |   ( Updated:2024-12-14 15:48:10  )
vettaiyan
X

vettaiyan

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன் நடித்துள்ளார். படத்திற்கு எதிர்பார்த்த அளவு பெரிய அளவிலான வரவேற்பு இல்லை. கலவையான விமர்சனங்களே வந்தன. இதுபற்றி படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் என்ன சொல்றாருன்னு பாருங்க.

விமர்சனம் என்ன நோக்கத்திற்காக வைக்கப்படுகிறது என்பது நாம எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வி. சும்மா என் படம் ஓவர்சீஸ்ல பர்ஸ்ட் ஷோ வருதுன்னா அதுக்கு முன்னால படம் டிஸ்ஆஸ்டர்னு ஹேஷ்டாக் வந்துருச்சு.

எல்லாருக்கும் ஆன்லைன்ல, சோஷியல் மீடியாவுல போயி படத்தைப் பற்றி ஓபீனியன் பார்க்குறாங்க. படத்தைப் பற்றிய ரிவியு பார்த்துடறாங்க. இப்ப நீங்க வந்து உள்ளே போறீங்கன்னா பர்ஸ்ட் இந்தப் படம் டிஸ்ஆஸ்டர்னு தெரிஞ்சிடுது. அந்த ஒப்பீனியன் பார்ம் ஆகிடுச்சுன்னா அதை மாத்துற சக்தி அங்கே இருக்காது என்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல்.

அது மட்டுமல்லாமல் படத்திற்கான மோட்டிவேஷன் பற்றி கேள்வி எழுப்பியபோது அவர் சொன்ன பதில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

நான் இந்தக் கள்ளிப்பால் கொடுக்குற மாதிரிதான் பார்க்குறேன். சின்ன வயசுல இருந்து கேள்விப்பட்டுருக்கோம். பெண் குழந்தை பிறந்துடுச்சுன்னா கள்ளிப்பால் கொடுப்பாங்க. அதுமாதிரிதான் இதுவும். நீங்க விரும்பாத ஒருத்தர் அந்தப் படத்துல இருந்தாலோ, நடிச்சிருந்தாலோ, எடுத்திருந்தாலோ உடனே கள்ளிப்பால் ஊத்துங்கற தன்மை வந்து இங்க ஜாஸ்தியா ஆகிடுச்சு.


ஒரு படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னால இப்படி ஒரு ஹேஷ்டேக் வெளியாகுறது குறித்து இங்க ரிவியூஸ் பண்ற யாருக்குமே எந்த ஒப்பீனியனும் இல்லையா என்கிறதுதான் என் கேள்வி.

இப்ப நீங்க அதைப் பத்தி பேசணும்ல. இது வரவே இல்லையே. ஏன் வந்துச்சுன்னு கேட்குறீங்கள்ல. ஒரு கனெக்டிவிட்டி இல்லன்னு நினைக்கிறேன். இவங்கள அழிக்கணும்கற நோக்கத்துலயே அது ஜாஸ்தியாக ஆரம்பிச்சிருக்கு.

அதுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கு. ஐடியாலஜி காரணமா இருக்கு. இப்போ நான் பேசுறதுல எதிர் கருத்து உள்ளவங்க சோஷியல் மீடியாவுல ஒரு ஆர்மி மாதிரி இருக்காங்கன்னு வச்சிக்கோங்க. அவங்க அப்படித்தான் பேசுவாங்க.

அந்தப் படத்துல சின்ன சின்ன டெக்னீஷியன்ஸ், நடிகர்கள் நிறைய பேரு இருக்காங்க. அவங்க பெரிய எதிர்பார்ப்போட இருப்பாங்க. அந்தப் படம் கீழே விழுந்துடுச்சுன்னா அவங்க கீழே விழுந்ததாகத் தான் அர்த்தம் என்கிறார் த.செ.ஞானவேல்.

Next Story