சிவாஜிக்கு கதை சொல்ல இயக்குனர் செய்த காரியம்... இதெல்லாம் ஓவரா இல்ல..!

by Sankaran |
sivaji
X

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ்த்திரை உலகின் 'சிம்ம சொப்பனம்' என்றால் மிகையில்லை. அவரது படங்களே அதற்கு சாட்சி.

ஒரு காலத்தில் எம்ஜிஆருக்குப் போட்டியாக நடித்தவர் சிவாஜி. பிற்காலத்தில் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, முரளி, கார்த்திக் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.


தேவர்மகன்: கமலுடன் இணைந்து தேவர்மகன் படத்தில் சிவாஜி நடித்தார். அதுவும் கமலின் தயாரிப்பு, கதை, திரைக்கதை. அப்போது போஸ்டரில் மூத்த தலைமுறையும், இளையதலைமுறையும் இணைந்து வழங்கி இருக்கும் வெள்ளி விழா படம் என்று குறிப்பிட்டு நாளிதழ் ஒன்று வாழ்த்தியது.

கமல் எழுதிய வசனத்தை சிவாஜி அவருக்கே உரிய ஸ்டைலில் பேசும்போது தியேட்டரில் ரசிகர்கள் ஆரவாரத்தில் குதூகலித்தனர். 'விதை விதைச்ச உடனே பழம் சாப்பிட்டுற முடியுமோ... விதை நான் போட்டது' என்ற அந்த வசனம் இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

படையப்பா: அதே போல ரஜினியுடன் படையப்பா படத்தில் கடைசியாக நடித்தார். இரு படங்களுக்கும் அமோக வரவேற்பு இருந்தது. சிவாஜி கடைசியாக தமிழ்த்திரை உலகில் நடித்த படம் பூப்பறிக்க வருகிறோம். இது 1999ல் வெளியானது. ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். சிவாஜி, அஜய், மாளவிகா, ரகுவரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். இந்தப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்திற்காக சிவாஜியிடம் கதை சொல்லப் போனாராம் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். அப்போது நடந்த சில சுவாரசியமான விஷயங்களைப் பற்றி தற்போது தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.


பூப்பறிக்க வருகிறோம்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடைசியாக நடித்த பூப்பறிக்க வருகிறோம் படத்தினை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். அவர் சிவாஜியிடம் கதை சொல்லும்போது, அவரது வீட்டில் தரையில் அமர்ந்து சொன்னாராம். ஏன் என்று சிவாஜி கேட்க, அதற்கு வெங்கடேஷ் உங்கள் படங்களை எங்க ஊரு தியேட்டர்ல சேரில் உட்கார்ந்து மேல்நோக்கி விசில் அடிச்சிப் பார்த்து ரசித்தவன்.

நான் இப்போது உங்களுக்கு சரிசமமாக உட்கார்ந்து என்னால் கதை சொல்ல முடியாது. எனவே நான் தரையில் அமர்ந்து உங்களை மேல்நோக்கி பார்த்தே கதை சொல்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Next Story