எம்.பி. பதவிக்கு ஆசைப்பட்டு எல்லாத்தையும் இழந்துட்டான் வடிவேலு!.. இயக்குனர் பகீர்!...

by MURUGAN |
vadivelu
X

Vadivelu: வடிவேலுவுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத போது சின்ன கவுண்டர் படத்தில் தனக்கு குடை பிடிக்கும் வேடத்தை கொடுத்து அவருக்கு கட்டிக்கொள்ள வேஷ்டி, சட்டையும் வாங்கிக்கொடுத்தார் விஜயகாந்த். அதோடு மட்டுமில்லாமல் தன்னுடைய படங்களில் வடிவேலுவுக்கு வாய்ப்பும் கொடுத்து வளர்த்துவிட்டார்.

ஆனால், வளர்த்த கெடா மார்பில் பாய்வது போல விஜயகாந்தை சகட்டு மேனிக்கு திட்டியவர்தான் வடிவேலு. விஜயகாந்த் இருந்த அதே தெருவில் வேண்டுமென்றே வீடு வாங்கி குடியேறினார் வடிவேலு. ஒருநாள் விஜயகாந்தை பார்க்க வந்த தேமுதிக தொண்டர்கள் கார்களை அந்த தெருவில் நிறுத்தியிருந்தனர். இதனால் வடிவேலு வீட்டுக்கு செல்ல முடியாத நிலை வர அவர்களோடு சண்டை போட்டார் வடிவேலு. அது காவல் நிலையம் வரை சென்றுவிட்டது.


அந்த கோபத்தில் விஜயகாந்தை திட்டுவதற்காகவே திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. எல்லா இடங்களிலும் விஜயகாந்தை குடிகாரன்.. அவன் இவன்.. என மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால், அந்த தேர்தலில் 14 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவராக மாறினார் விஜயகாந்த்.

அப்போதுதான் வடிவேலுவுக்கு இறங்கு முகம் துவங்கியது. திரையுலகில் பலரும் வடிவேலுவை ஒதுக்கினார்கள். ஒரு கட்டத்தில் 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதன்பின் அவர் ஹீரோவாக நடித்த படங்களும், காமெடியனாக நடித்த படங்களும் ஓடவில்லை. எனவே, இப்போது குணச்சித்திர நடிகராக நடிக்க துவங்கிவிட்டார்.


இந்நிலையில், வடிவேலு வளரும் நேரத்தில் காலம் மாறிப்போச்சி போன்ற படங்களை கொடுத்து அவரை தூக்கிவிட்ட இயக்குனர் வி.சேகர் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘வடிவேலுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து நன்றாக போய்கொண்டிருந்த போது திடீரென விஜயகாந்தை திட்டி பிரச்சாரம் செய்தான். ‘இது வேண்டாம் உனக்கு நல்லதில்லை’ என சொன்னேன். ‘திமுக ஜெயித்தால் எனக்கு எம்.பி. பதவி கொடுக்கறன்னு சொல்லியிருக்காங்கண்ணே’ என்றான். ‘தோத்து போச்சின்னா உன்ன வீட்டுக்கு அனுப்பிடுவாங்க’ என சொன்னேன். அவன் கேட்கவில்லை. தேர்தல் ரிசல்ட்டுக்கு பின் 7 மாசம் மதுரைக்கு ஓடிப் போய்ட்டான். அதனால் விவேக்கை வச்சி படங்கள் எடுத்தேன்’ என சொல்லியிருக்கிறார்.

Next Story