பாக்கியராஜிடம் நேருக்கு நேரா குறை சொல்லி இயக்குனர் ஆனவர்... அட அவரா?

பாக்கியராஜின் படத்தைப் பார்த்து விட்டு அவரிடமே நேருக்கு நேராகக் குறை சொல்லி இருக்கிறார் இந்த இயக்குனர். யார் அவர்? எப்படி அவர் இயக்குனர் ஆனார் என்பதை அறிய ஆவலா? வேறு யாருமல்ல. குடும்பப்பாங்கான பல படங்களை இயக்கி வெற்றி பெற்ற வி.சேகர்தான். அந்த சுவாரசியமான தருணங்களை அவரே சொல்லக் கேட்போம்.
எம்ஜிஆரின் வாரிசு: பாக்கியராஜிக்கு சின்ன வீடு படம் வந்தது. அப்போ அவரை எம்ஜிஆரின் வாரிசுன்னு சொல்வாங்க. 50 பேரை அழைச்சிட்டு வந்து படத்தைப் போட்டுக் காட்டுவாரு. படம் நல்லாருந்ததுன்னா அவரே ரிலீஸ் பண்ணுவாரு. வேற மாதிரி சொன்னா வித்துருவாரு. ஆடியன்ஸ் பல்ஸ் கண்டுபிடிக்கிறாரு.
சின்னவீடு: நான் அப்போ ஹெல்த் இன்ஸ்பெக்டரா இருந்தேன். ஒரு தம்பி வந்து கூப்பிடுறாரு. அவரு சார் ஏவிஎம்ல சின்னவீடு படம் போடுறாங்க. பார்க்க வர்றீங்களான்னு கேட்டாரு. அப்போ சரின்னு உள்ளே போனேன். நான் பார்த்தேன். படம் எப்படி இருக்குன்னு எங்கிட்ட பாக்கியராஜ் கேட்டாரு. மற்றவங்க எல்லாம் பயந்துட்டாங்க.
நான் சொன்னேன். உங்களோட முந்தானை முடிச்ச, மௌனகீதங்கள் எல்லாம் அருமையான கதை. நல்ல படம். ஆனா இதுல ஒரு சின்ன மைனஸ் இருக்கு. பொண்ணோட கேரக்டர் சரியில்லன்னா ஹீரோ பிடிக்கலன்னு சொல்லலாம். ஆனா குண்டா இருக்குற ஒரே காரணத்துக்காக வேணாம்னு சொல்லி இன்னொரு பொண்ணு கூட போனா அதுக்கு நீங்களே வில்லனா ஆகிடுறீங்க.
சின்ன மைனஸ்: உங்களுக்கு இப்போ பெரிய இமேஜ் இருக்கு. அது மட்டும்தான் படத்துல ஒரு சின்ன மைனஸ்னு சொன்னேன். அப்போ அங்க பெரிய பெரிய ரைட்டர்ஸ் எல்லாம் இருக்காங்க. அவங்க எல்லாம் 'படம் நல்லாருக்குன்னு சொல்லிட்டு வந்துட வேண்டியதுதானே'ன்னு சொல்றாங்க. நான் ஏன் அப்படி சொல்லணும்?
'நீங்க கூடவே இருக்கறதால சொல்ல மாட்டீங்க. எனக்கு என்ன இருக்கு? உண்மையத்தானே சொன்னேன்'னு சொல்லிட்டு வந்துட்டேன். நான் அப்போ குடியிருப்போர் சங்கத் தலைவர். மறுநாள் ஒரு கார் வந்து நிக்குது. அது பாரதிராஜா சார் பாக்கியராஜிக்கு கொடுத்தது. அப்புறம் என்னை பாக்கியராஜ் சார் வரச்சொன்னதா சொல்றாங்க.
பார்த்திபன் முறைச்சாரு: நானும் போய் பார்த்தேன். நேத்து ஒரு குறை சொன்னீங்க. அதை சொல்லுங்கன்னு பாக்கியராஜ் சார் கேட்குறாரு. நான் சொன்னதும் அங்க இருக்குறவங்க பார்த்திபன் உள்பட அசிஸ்டண்ட்ஸ், ரைட்டர்ஸ் எல்லாம் முறைக்கிறாங்க. அப்போ பாக்கியராஜ் சொல்றாரு. நீங்க சொன்னது சரிதான்.
இங்க இருக்குறவங்க எல்லாம் பயந்துகிட்டு சொல்ல மாட்டாங்க. நீ சொன்னது நியாயமா தெரியுதுன்னு சொன்னாரு. அதனால அந்தப் படத்தை வித்துட்டாரு. அப்புறம் என்னை இங்கயே வேலைக்கு வந்துடுங்கன்னு சொல்றாரு. இல்ல சார் எனக்கு கவர்மண்ட் வேலை. புரொமோஷன், பென்ஷன்லாம் வரும்னு சொன்னேன்.
செக்யூரிட்டி தான் முக்கியம்: இங்கே நிறைய படிச்சவங்க வக்கீல், டபுள் எம்ஏன்னு இருக்காங்க. சினிமா வாய்ப்பு கிடைக்கிறது கஷ்டம்னு சொல்லி கூப்பிடுறாரு. அப்புறம் எனக்கு செக்யூரிட்டி தான் முக்கியம். என்னை நம்பி குடும்பம், குழந்தை எல்லாம் இருக்கு. அதனால 6 மாசம் லீவு போட்டுட்டு வந்து இங்க சேர்ந்துக்கறேன்னு சொன்னேன்.
பாண்டியராஜன், பார்த்திபன்: அதே மாதிரி நான் வந்ததும் எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு படம்னு பெரிய ஹிட் வந்தது. அப்புறம் பாண்டியராஜன், பார்த்திபன் எல்லாம் தனித்தனியா பிரிஞ்சி டைரக்டர் ஆகிடுறாங்க. என்னையும் சும்மா விடுவாங்களா? வாங்கன்னு அழைச்சிட்டுப் போயி டைரக்டரா ஆக்கிட்டாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.