5 லட்சம் அவரால தான் நஷ்டம்... அப்படி இருந்தும் குமரிமுத்துவைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர்
காமெடி நடிகர் குமரிமுத்து குறித்து பிரபல குடும்ப இயக்குனர் என்று அழைக்கப்படும் வி.சேகர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...
குமரிமுத்துவோட சிரிப்பு எல்லாருக்கும் பிடிக்கும். அவரோட ஆக்டிங் பிடிக்கும். இயக்குனர் வி.சேகரின் படங்களில் அவர் தனியாகத் தெரிவார். இதுபற்றி இயக்குனர் என்ன சொல்றாருன்னு பாருங்க.
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்: குமரிமுத்து நல்ல மனிதர். அவரும் டிராமா ஆர்டிஸ்ட். ரொம்ப பாலிடிக்ஸ் இல்லாத மனிரதர். யதார்த்தமா இருக்காருன்னு அவரை பல படங்கள்ல நடிக்க வச்சேன். ஒரு தடவை பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் படத்துல அவரை நடிக்க வச்சேன். அப்போ மலேசியாவுல ஒரு புரோக்கிராம்னு 2 நாள் பர்மிஷன் வாங்கிட்டுப் போனாரு.
அதுக்கு அப்புறம் பார்த்தா நான் பட்ஜெட்ல படம் எடுக்குறவன். இவரு முக்கியமா கிளைமாக்ஸ்ல இருக்கணும். அப்புறம் அவரு வரல. அங்க அவரோட பாஸ்போர்ட் மிஸ் ஆகிடுச்சு. அவரு வராததால எனக்கு 5 லட்சம் லாஸ்.
பாஸ்போர்ட் மிஸ்: திருப்பி அவரு எங்கிட்ட ஓடிவந்து பாஸ்போர்ட் மிஸ் ஆச்சு. 'என்னால உடனே வர முடியல. சூழ்நிலை அந்த மாதிரி ஆகிப்போச்சு'ன்னு சொன்னாரு. நல்ல மனிதர். அதுக்கு அப்புறம் அவர் என்ன சொன்னாருன்னா 'உங்க படத்துல நான் இருக்கணும். நீங்க என்ன கொடுத்தாலும் சரிதான். ஏன்னா நான் லாஸ் பண்ணிட்டேன்ல'ன்னாரு.
ஆனா பெரும்பாலும் எல்லா படத்துலயும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பேன். எவ்வளவு டேட்னாலும் கொடுப்பாரு. அவர் திமுகவுலயே இருந்தாரு. யாரையும் திட்டாம மேடையில போய் பேசுவாரு. ஆனா எதிர்க்கட்சியைக் கேவலமா திட்ட மாட்டாரு. அது அவரால மட்டும்தான் முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
குடும்பப் பாங்கான படங்கள்: இயக்குனர் வி.சேகரின் படங்களைப் பொருத்தவரை எல்லாமே குடும்பப் பாங்கானவை. தாய்மார்களைப் பெரிதும் கவரும். குடும்ப உறவுகளுக்குள் உண்டாகும் சிக்கலை முடிச்சு முடிச்சாகப் போட்டு அவிழ்ப்பதில் திறமையானவர்.
இவரது படங்களும், விசுவின் படங்களும் அப்படித்தான் இருக்கும். எந்தவித ஆபாசமோ, இரட்டை அர்த்த வசனங்களோ இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.