33 ஆண்டுகளுக்குப் பின்னும் தளபதி படத்துக்கு இவ்ளோ மாஸ் இருக்கே... அதுக்கு இதுதான் காரணமா?

by Sankaran |
thalapathi
X

ரஜினிகாந்த், மம்முட்டி இணைந்து நடித்த தளபதி படம் நேற்று ரஜினியின் பிறந்தநாளையொட்டி ரீ ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் இப்பவும் அந்த மவுசு கொஞ்சம் கூட குறையாமல் தீபாவளி மாதிரி கொண்டாடினார்கள். அந்தப் படத்தில் அற்புதமான பாடல்கள், காட்சி அமைப்புகள், பின்னணி இசை என எதுவுமே குறைசொல்லாத வகையில் இருக்கும்.

குறிப்பாக அந்தப் படத்தில் கேரக்டர்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு யதார்த்தமாக இருக்கும். ஸ்ரீவித்யா ரஜினியின் தாயாக வரும் காட்சிகள் எல்லாம் கண்கலங்க வைத்து விடுவார். சின்னத்தாயவள் என்ற அந்தப் பாடல் வரும்போதெல்லாம் மனதுக்குள் இனம்புரியாத சோகம் வரும்.

'நட்புன்னா என்னன்னு தெரியுமா' என்று ரஜினி, மம்முட்டி பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கும். காட்டுக்குயிலு மனசுக்குள்ள, ராக்கம்மா கையத்தட்டு பாடல்களும், யமுனை ஆற்றிலே, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, மார்கழிதான் என எந்தப் பாடலையும் நாம் விட்டுவிட முடியாது. அவ்வளவும் சூப்பர் டூப்பர்ஹிட் தான்.

ilaiyaraja manirathnam

ரஜினியின் வழக்கமான ஸ்டைல் மட்டும் இல்லாமல் அற்புதமான நடிப்பையும் மணிரத்னம் அவரிடம் இருந்து வெளிக்கொணர்ந்து இருப்பார். மம்முட்டியும் அலட்டல் இல்லாமல் அருமையான நடிப்பைத் தந்துள்ளார். அதுதவிர அரவிந்தசாமியா இது? இவ்வளவு சின்னவயதில் அப்பவே ஸ்மார்ட்டாக இருக்கிறாரே... என்று வியக்க வைத்து இருப்பார்.

அந்தவகையில் படத்தின் இவ்ளோ பெரிய வெற்றிக்கு என்ன காரணம் என வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் தளபதி. படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக இன்று வரை இருக்கிறது என்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. முதல் காரணம் அந்தப் படத்தோட வித்தியாசமான திரைக்கதை. இரண்டாவது அந்தப் படத்துக்கான நட்சத்திரத் தேர்வு. மூன்றாவது இளையராஜாவின் இசை.

thalapathi

மற்ற படங்களில் இளையராஜா இசை அமைத்ததற்கும், தளபதி படத்தில் அவர் இசை அமைத்ததற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. அதை நல்லா கவனிச்சிப் பார்த்தா தெரியும். அந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் சிம்பொனி இசை கலந்த மாதிரி மிகச்சிறப்பாக இசை அமைத்து இருந்தார்.

அதற்கு முன்னால எந்தப் படத்துக்கும் அவர் அப்படி இசை அமைத்தது இல்லை. பாடல்கள் அவ்வளவு இனிமையாக இருக்கும். அந்தப் படத்துல என்னைக் கவர்ந்த காட்சி எதுன்னா மம்முட்டிக்கிட்ட நட்பைப் பற்றிச் சொல்வாரே அந்தக் காட்சி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story