அஜித் - ஷாலினி திருமணத்தில் நடந்த தரமான சம்பவம்!.. இத யாருமே யோசிக்கலயே!..

by Murugan |
ajith wedding
X

Ajith Shalini: நடிகர் அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 2000ம் வருடம் நடைபெற்றது. அமர்க்களம் படத்தில் நடித்தபோது ஷாலினி மீது அஜித்துக்கு காதல் வந்தது. சில மாதங்கள் ஒரு ஒருதலையாகவே இருந்தது. அஜித்தின் காதலை ஏற்றுக்கொள்வதில் ஷாலினிக்கு தயக்கம் இருந்தது.

அதன்பின் ஒருவழியாக அவர் ஓகே சொல்ல இருவரின் திருமணமும் நடந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அப்போதையை முதல்வர் ஜெயலலிதா கூட கலந்துகொண்டு இருவருக்கும் வாழ்த்து சொன்னார். விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டார். நடிகர் திலகம் சிவாஜி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அவர்களின் திருமண நிகழ்வு சென்னையில் உள்ள தாஜ் கன்னிமாரா நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. பொதுவாக திருமணத்திற்கு வரும் விஐபி-க்களின் கார் ஓட்டுனர்கள் ஹோட்டல் வாசலில் இறக்கிவிட்டு பார்க்கிங்கில் காத்திருப்பதுதான் வழக்கம். கார் ஓட்டுனர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள்.


இது பல வருடமாக நடக்கும் நிகழ்வுதான். ஆனால், அஜித்தின் திருமண வரவேற்பு நடந்தபோது விஐபிக்கள் காரை விட்டு இறங்கியதும் கார் ஓட்டுனர்களுக்கு உணவும், தண்ணீரும் கொடுக்கப்பட்டது. இந்த தகவலை பிரபல சினிமா பி.ஆர்.ஓ நிகில் முருகன் கூறியிருக்கிறார்.

இதை நான் சொன்னதும் ‘நல்ல யோசனை.. செய்யுங்கள்’ என அஜித் சொன்னார். ஒருவேலை ஹோட்டல் நிர்வாகம் ‘இதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வது?’ எனக்கேட்டேன். அதற்கு ‘அப்படின்னா எந்த ஹோட்டல் அனுமதி தருகிறதோ அங்கு ரிசப்சனை மாற்றிவிடலாம்’ என்றார். இதுதான் அஜித்தின் சுபாவம்’ என அவர் கூறியிருக்கிறார்.

சினிமா பிரபலங்கள் பலரும் பிரிந்துவிட்ட நிலையில் கடந்த 25 வருடங்களாக அஜித்தும் ஷாலினியும் அதே காதலோடு இல்லற வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கிறது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story