அடிதடியில் முடிந்த காமெடி சீன்... நடிகரை அடிக்க ஓடிய கவுண்டமணி!.. இப்படி ஒரு பிளாஷ்பேக்கா?
கவுண்டமணி:தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்பதற்கு எப்பொழுதுமே ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. அதுவும் ஆரம்ப கால படங்கள் பெரும்பாலும் நகைச்சுவைக்காகவே ஓடி இருக்கின்றன. அதுவும் கவுண்டமணி செந்தில் காமெடி என்றாலே அது ஒரு தனி வரவேற்பு தான். ஹீரோ ஹீரோயின் கால்ஷீட் கிடைக்கிறதோ இல்லையோ கவுண்டமணி செந்தில் கால் ஷீட் கிடைக்கிறது அரிதாகவே இருந்தன. அந்த அளவுக்கு காமெடியில் இருவரும் கொடி கட்டி பறந்தனர்.
எல்லா படங்களிலும் கவுண்டமணி செந்தில் நிச்சயமாக இருப்பார்கள். இப்பொழுது யோகி பாபு எந்த அளவுக்கு பிஸியாக இருக்கிறாரோ அதைப்போல பல மடங்கு கவுண்டமணி செந்தில் 80 களிலும் 90 களிலும் அதிகமான படங்களில் நடித்து வந்தனர். அதுவும் கவுண்டமணியின் அந்த பஞ்ச் டயலாக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எழுதி பேசுவது கவுண்டமணிக்கு என்றைக்குமே பழக்கம் கிடையாது.
மனதில் பட்டது பேசுவது:படப்பிடிப்பில் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே கவுண்டராக அடிப்பது தான் அவருடைய வழக்கம். அதனாலேயே அவர் கவுண்டமணி என்று அழைக்கப்பட்டார். இந்த நிலையில் பெரிய மருது படத்தில் கவுண்டமணிக்கும் எஸ்.எஸ். சந்திரனுக்கும் இடையில் நடந்த பஞ்சாயத்து என்னவென்று அனைவருக்குமே தெரியும். அதை விளக்கமாக கூறியிருக்கிறார் பிரபல எழுத்தாளர் ராஜகோபால். இவர் கவுண்டமணியின் 70 படங்களுக்கு வசனம் எழுதியவர். ஒரு சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார்.
வெண்ணிறாடை மூர்த்தியால் வந்த பிரச்சினை:பெரிய மருது படத்திற்கும் இவர்தான் வசனம் எழுதியவர். அப்போது இவர் எழுதாத ஒரு வசனத்தை எஸ் எஸ் சந்திரன் கவுண்டமணியை பார்த்து கூறிவிட்டார். அதாவது கரடி மாதிரி உட்கார்ந்து இருக்கான் என எஸ் எஸ் சந்திரன் கவுண்டமணியை பார்த்து கூறிவிட்டார். அதற்கு கவுண்டமணி கோபப்பட்டு பிரச்சனையை பெரிதாக்கி இருக்கிறார். இதற்கு எஸ் எஸ் சந்திரன் பேப்பரில் உள்ளதை தான் படிக்கணுமா என்ன? அதுக்கு வெண்ணிறாடை மூர்த்தி இருக்கிறார் என நக்கலாக கூறினாராம்.
இதுதான் கவுண்டமணிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வெண்ணிறாடை மூர்த்தியும் மூன்று தலைமுறை நடிகர்களை பார்த்தவர். அவரைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என எஸ் எஸ் சந்திரனை அடிக்க போய்விட்டாராம். அதிலிருந்து இருவருக்கும் பயங்கர சண்டை நடந்திருக்கிறது. அதன்பிறகு ரைட்டர் ராஜகோபாலை அழைத்து எஸ் எஸ் சந்திரனும் கவுண்டமணியும் தனித்தனியாக பேசி ஏன் இப்படி எழுதினீர்கள் என கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு ராஜகோபால் இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. தயாரிப்பாளர் சங்கிலி முருகனைக் கேளுங்கள். நான் மாமனார் மருமகன் என்றபடி தான் ஸ்கிரிப்டில் எழுதி இருந்தேன். அதில் மாமனார் எஸ் எஸ் சந்திரன் மருமகன் கவுண்டமணி என பெயர் போட்டு நான் எழுதவில்லை. சங்கிலி முருகனை கேட்டுக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டாராம் ராஜகோபால்.