புதுவருடப்பாடலில் விஞ்சி நிற்பது கமலா, சிவாஜியா? யாருக்கு முதலிடம்...?
புதுவருஷம் தொடங்கினாலே ரேடியோ மற்றும் டிவிகளில் 2 பாட்டுகள் தான் பிரபலம். 1982ல் ரிலீஸ் ஆன பாடல்கள் தான். புதுவருஷம் அன்று நடக்கும் பார்ட்டி, கொண்டாட்டங்களில் இந்த 2 பாடல்கள் தான் அதிகமாக இடம்பிடிக்கும்.
இவற்றில் ஒன்று நல்லோர்கள் வாழ்வை காக்க என்ற சிவாஜி பாடல். 1982ல் வெளியான சங்கிலி படத்தில் இந்தப் பாடல் வருகிறது. இன்னொன்று அதே ஆண்டில் கமல் நடித்து வெளியான சகலகலா வல்லவன் படப்பாடல். இளமை இதோ இதோ என்ற பாடல். சிவாஜி பாட்டுக்கு எம்எஸ்வி.யும், கமல் பாட்டுக்கு இளையராஜாவும் இசை அமைத்துள்ளனர்.
விக்ரமன் இசையில் உன்னை நினைத்து படத்தில் வந்த 'ஹேப்பி நியூ இயர்' பாடல் பிரபலம். இசை படத்தில் எஸ்ஜே.சூர்யா பாடும் 'புத்தாண்டின் முதல் நாளிது' பாடலும் பிரபலம். இதுதவிர அஜீத் நடித்த பகைவன், விஜய்சேதுபதி, டிஆர். நடித்த கவண் படங்களிலும் புத்தாண்டுப் பாடல்கள் வந்தன. ஆனால் எதுவுமே பிரபலம் ஆகவில்லை.
புதுவருடத்தில் நல்ல செயல்கள், சிந்தனைகளை எடுத்துச் சொல்லணும். அதுதான் புத்தாண்டுக்கு அடையாளமாக இருக்கும். அந்த விதத்தில் பார்த்தால் சங்கிலி, சகலகலாவல்லவன் என்ற இரு படங்களில் வரும் புத்தாண்டுப் பாடல்களில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சிவாஜி நடித்த சங்கிலி படப்பாடல்தான். 'நல்லோர்கள் வாழ்வைக் காக்க' என்ற இந்தப் பாடலை டிஎம்எஸ். பாடியுள்ளார். கண்ணதாசன் எழுதியுள்ளார்.
கமல் நடித்த சகலகலாவல்லவன் படத்தில் வரும் 'இளமை இதோ இதோ' பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். பாடியவர் எஸ்பிபி. இளையராஜா இசை. இந்தப் பாடலின் முதல்வரி தான் ஹேப்பிநியூ இயர்னு ஆரம்பிக்கும்.
மற்றவரிகளில் புத்தாண்டுக்கும், இந்தப் பாட்டுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை. 'குத்துவதில் சூரன் நான்'. புத்தாண்டும் அதுவுமா இப்படிப் பாடலாமா? 'ஏக் துஜே கேலியே'ன்னு இதுல இந்தி வரிகள் வேறு. 'யார் காதிலும் பூ சுற்றுவேன்' என ஏமாற்றுவேலை. 'எல்லோருக்கும் என் மீது கண்கள்'னு தற்பெருமை வேறு வருகிறது.
ஆனால் சிவாஜி பாடலில் சமுதாய சிந்தனை, மனிதாபிமானம் என உயர்ந்த கருத்துக்ள வருகிறது. அதே நேரம் அதை விட கமல் பாடலைத் தான் அதிகம் கொண்டாடுகிறார்கள்? ஏன் என்றால் ஒன்லி மியூசிக் தான். கமலின் அட்டகாசமான நடனம். அதனால் இதைத்தான் சிவாஜி பாடலை விட ரசிக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.