எஸ்பிபியை அப்படிப் பாடச் சொன்ன ஏ.ஆர்.ரகுமான்... அதனாலதான் அந்தப் பாட்டுக்கு தேசியவிருதா..?
தமிழ்த்திரை உலகில் 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி அசத்தியுள்ளார். கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 16 மொழிகளில் பாடி இருக்கிறார். அவரது மகன் எஸ்பி.சரணும் பாடகர் தான்.
எம்ஜிஆர் காலம் முதல் 2கே கிட்ஸ் வரை பாடியுள்ளார். இவரது பாடல்களை இப்போது கேட்டாலும் ரசிக்க வைக்கும். அதிலும் இளையராஜாவின் இசையில் இவரது பாடல்கள் தேவாமிர்தமாக இருக்கும் என்றே சொல்லலாம்.
மின்சாரக்கனவு படத்திற்காக இவர் பாடிய சூப்பர்ஹிட் மெலடி பாடல் தங்கத்தாமரை மகளே. இந்தப் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது எப்படின்னு தெரியுமா?
மின்சாரக்கனவு படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாமே அருமையாக இருக்கும். இந்தப் படம் ஏவிஎம் நிறுவனம் பொன்விழா ஆண்டில் அடி எடுத்து வைக்கும்போது எடுத்த படம் தான் இது.
ராஜீவ் மேனன் இயக்கத்தில் அரவிந்தசாமி, பிரபுதேவா, கஜோல், எஸ்பிபி, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு குதூகலமான முக்கோண காதல் கதை. ரசிகர்கள் மத்தியில் படமும், பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
பூ பூக்கும் ஓசை, மானா மதுரை, அன்பென்ற மழையிலே, தங்கத் தாமரை, ஸ்ட்ரா பெர்ரி, வெண்ணிலவே வெண்ணிலவே ஆகிய பாடல்கள் உள்ளன. இவற்றில் தங்கத்தாமரை மகளே பாடலை எஸ்பி.பாலசுப்பிரமணியமும், மால்குடி சுபாவும் பாடினர்.
இந்தப் பாடலை ஏ.ஆர்.ரகுமான் 'ஒரு சோம்பேறி போல பாட வேண்டும்'னு எஸ்பிபிக்கு நோட்ஸ் கொடுத்தாராம். 'அதாவது பாடவே விருப்பம் இல்லாமல் ஒருவன் இழுத்துக்கொண்டே பாடினால் எப்படி இருக்குமோ அப்படி பாட வேண்டும்' என்றாராம். அவர் சொன்னது போலவே எஸ்பிபியும் பாட, மிகப்பெரிய ஹிட் ஆனது.
அப்படி ஒரு சூப்பர்ஹிட் பாடல் அது. இப்போது கேட்டாலும் அந்த இசையும், எஸ்பிபி வாய்ஸ்சும் நம்மை பாடலுடன் சேர்த்து இழுத்துக்கொண்டே போகும். இந்தப் பாடலைப் பாடியதற்காக எஸ்பிபிக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.