ரஜினிக்கிட்ட பேச ரிகர்ஷல் பாத்துட்டு போன நடிகை.. ஆனா நடந்தது என்ன தெரியுமா?
என்னதான் ரஜினி மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் மற்றவர்களிடம் அவர் பழகும் தன்மை ,பேசும் விதம் என மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார் ரஜினி. இத்தனை வருட வாழ்க்கையில் அனைவரிடமும் மிகவும் எளிமையாக பழக கூடியவர். இவ்வளவு பேரும் புகழும் பெற்றவராக இருந்தாலும் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் அனைவரும் சரிசமம் என நினைத்து பழகக் கூடியவராக இருக்கிறார் ரஜினி.
இதற்கு உதாரணமாக எண்ணற்ற பல சம்பவங்களை கூறலாம். குறிப்பாக அண்ணாமலை படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான தகவலை நடிகை ஒருவர் பேட்டியில் கூறியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருப்பவர் தாக்ஷாயினி. அவர் இந்த படத்தில் நடிக்கும் போது ரஜினியுடன் பேச வேண்டும் என்பதற்காக ரிகர்சல் எடுத்தாராம்.
அதாவது முதல் நாள் படப்பிடிப்பின் போது ரஜினியின் காலை தொட்டு வணங்க வேண்டும் என்பதற்காக அதற்காக ஒத்திகை எல்லாம் பார்த்துவிட்டு சென்றிருக்கிறார் .ஸ்பாட்டுக்கு போனதும் இவரை முந்திக்கொண்டு ரஜினி தாக்ஷாயினி தோள் மீது கை போட்டு அனைவரிடமும் இவர் தான் இந்த படத்தில் எனக்கு மகளாக நடிக்கப் போகிறார். இவர் பெயர் தாக்ஷாயினி என அறிமுகப்படுத்தினாராம் .
இதை பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது என ஒரு பேட்டியில் தாக்ஷாயினி கூறியிருக்கிறார். தற்போது இவர் பல நாடகங்களில் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார். இந்த வருடம் ரஜினி அவருடைய ஐம்பதாவது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அதனால் ரஜினி சம்பந்தப்பட்ட பல சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகிக்கொண்டே வருகின்றன.
அதில் ஒன்றுதான் இந்த சம்பவம். இவருடைய பொன்விழா ஆண்டை ஒட்டுமொத்த திரையுலகமும் ஒரு பெரிய விழாவாக எடுத்து நடத்த திட்டமிட்டு வருகின்றனர். அது எப்போது எங்கே என்பது இனிமேல் தான் தெரிய வரும். கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக ஹீரோவாக நடித்து வரும் ஒரே நடிகராக ரஜினி இருந்து வருகிறார். அமிதாப்பச்சன் கூட ஆரம்பத்தில் கிடைத்த ரோலில் நடித்து அதன் பிறகு தான் ஹீரோவாக நடித்தார். ஆனால் 50 வருடமாக ஹீரோவாக நடித்த ஒரே இந்திய நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருப்பவர் ரஜினி என பத்திரிக்கையாளர் சுபேர் ஒரு பேட்டியில் கூறினார்.