முதல் பாடலைப் பாடிய சித்ரா... ஜானகியைப் பார்த்துக் கத்துக்கோன்னு சொன்ன இளையராஜா

by Sankaran |
chitra, ilaiyaraja
X

தமிழ்த்திரை உலகில் 'சின்னக்குயில்' என்று அழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகி சித்ரா. இவர் பாடிய பல பாடல்கள் சூப்பர்ஹிட். அதிலும் இவர் பாடிய முதல் பாடலின் போது என்ன நடந்ததுன்னு ரத்தினச் சுருக்கமாக சொல்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

இசைஞானி இளையராஜா இசையில் பிரபல பின்னணி பாடகி சித்ரா பாடிய முதல் பாடல் நீதானா அந்தக் குயில் என்ற படத்தில்தான் இடம்பெற்றது. அந்தப் படத்தை சித்ரா பாடியபோது இளையராஜா எந்தத் திருத்தத்தையும் சித்ராவிடம் சொல்லவில்லை.

அதற்குப் பதிலாக என்ன சொன்னாருன்னா 'இந்தப் பாட்டுல எங்கெங்க நீ என்ன தப்பு பண்ணிருக்கன்னு நான் சொல்ல மாட்டேன். நீயே அந்தப் பாட்டை ஒரு முறைக்கு இருமுறை கேட்டு எந்த இடத்துல தப்பு பண்ணிருக்கங்கறதை என் கிட்ட சொல்லு'ன்னாரு.

அவரு அப்படி சொன்னதும் அந்தப் பாடலைத் திரும்ப திரும்ப கேட்ட சித்ரா எந்தெந்த இடத்தில் என்னவெல்லாம் தப்பு பண்ணிருக்கோம்னு கண்டுபிடிக்கிறாங்க. அதுமட்டுமல்லாமல் இளையராஜாவிடம் அதைச் சொல்லிவிட்டு 'இந்தப் பாட்டை வேணா திரும்ப நான் பாடட்டுமா..' என்று கேட்கிறார்.

s.janaki

s.janaki

அதற்கு இளையராஜா 'வேண்டாம். இந்தப் பாடல் அப்படியே இருக்கட்டும். இதை எதுக்கு உனக்கு நான் சொன்னேன்னா அடுத்தடுத்த பாடல் பாடும்போது இது உன் மனதில் இருக்கும் என்பதற்காகத் தான் சொன்னேன்'. அதுமட்டும் இல்லாமல் 'எஸ்.ஜானகியோட பாட்டைத் தொடர்ந்து கேளு. அந்த அம்மா பாடுவதற்கு முன்னால் அந்தப் பாட்டோட சூழ்நிலையை மட்டும்தான் நான் சொல்வேன்.

முதல் மரியாதை படத்தில் வரும் ராசாவே உன்னை நம்பி பாடல் பாடும்போது அந்த அம்மா கிட்ட நான் ஒண்ணே ஒண்ணு தான் சொன்னேன். ஒண்ணுமே தெரியாத பெண் பாடுகிற பாட்டு என்று. அதை மனதில் வைத்துக் கொண்டு எஸ்.ஜானகி பாடியதால் தான் அந்தப் பாட்டு இந்தளவுக்கு வந்தது' என்று சித்ராவிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் இளையராஜா. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Next Story