இளையராஜா கோபப்பட்ட மொமெண்ட்!. ஆனா பாலச்சந்தருக்கு அது ஒன்னும் புதுசு இல்ல!...
இயக்குனர் சிகரம் என்பது பாலசந்தர் என்பது எல்லாருக்குமே தெரியும். இளையராஜா அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள் எல்லாமே சூப்பர்தான். அருமையான பாடல்களை இசைஞானி கொடுத்துள்ளார். இருவரும் பிரியக் காரணமாக இருந்தப் படம்னு புதுப்புது அர்த்தங்களைத் தான் சொல்வாங்க.
காலதாமதமாக இசை: இந்தப் படத்திற்கு இசை அமைக்க காலதாமதம் ஆனதால தான் இருவரும் பிரிந்ததாகச் சொல்கிறார்கள். அதே நேரம் பாலசந்தரும் இளையராஜா காலதாமதமாக இசை அமைக்கிறார் என்றதும் அவருடைய வேறு வேறு இசைத்துணுக்குகளை எடுத்துக் கொண்டு படத்தில் சேர்த்து ரிலீஸ் பண்ணி விட்டாராம். இந்த விஷயம் இளையராஜாவுக்குப் படம் வந்ததும்தான் தெரிந்ததாம். அதில் டென்ஷன் ஆன இளையராஜா அதன்பிறகு பாலசந்தரின் படங்களில் இசை அமைக்கவே இல்லை.
பாலசந்தருக்கு பின்னணி இசை சேர்ப்புக்கு வேறு வேறு இசை அமைப்பாளர்களையும் பயன்படுத்தி உள்ளார். இது முதல் முறை கிடையாது என்று இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். என்ன சொல்கிறார்னு பாருங்க.
பின்னணி இசை: ஏக் துஜே கேலியேன்னு ஒரு இந்திப்படம். அதற்கு இசை அமைத்தது லட்சுமிகாந்த் பியரிலால் தான். ஆனால் பின்னணி இசையை எம்எஸ்வி. தான் முடித்துக் கொடுத்தார். அதே போல சில படங்களுக்கு வி.குமார் இசை அமைத்துள்ளார். மற்றவங்க பிரச்சனை வெளியே தெரியாது. இசைஞானி என்றதும் அது வெளியில் தெரிந்துவிட்டது.
அந்த வகையில் இசைஞானி இசையில் பெரிய ஜாம்பவான். அதே போல படங்களை இயக்குவதில் சிகரமாக உயர்ந்து நின்றவர் பாலசந்தர். இருவருமே தங்கள் துறையில் பெரியவர்கள் என்பதால் அதற்கு ஏற்ற ஒரு கெத்து இருக்கத்தானே செய்யும்.
இளையராஜாதான் இசை: வேலைக்காரன், சிவா, சிந்து பைரவி, புன்னகை மன்னன், நான் மகான் அல்ல, உன்னால் முடியும் தம்பி, மனதில் உறுதி வேண்டும், நெற்றிக்கண் போன்றவை பாலசந்தரின் படங்கள்தான். இவற்றிற்கு இளையராஜாதான் இசை அமைத்துள்ளார். இவற்றில் சில படங்களைத் தயாரித்தும், சிலவற்றை இயக்கியும் உள்ளார் பாலசந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.