இளையராஜா செய்த அந்த வேலை... பாரதிராஜாவின் சாமர்த்தியம்... பாடலோ சூப்பர்ஹிட்!

by Sankaran |
ilaiyaraja, bharathiraja
X

80ஸ் கிட்ஸ்களைக் கேட்டால் ரொம்பவே ரசனையுடன் சொல்வார்கள். இப்ப என்ன பாட்டு போடுறாங்க. அப்ப வந்த எல்லா பாடல்களுமே ஹிட் தான். இப்ப ஒரே மியூசிக் தான் வருது. பாட்டுல என்ன சொல்ல வாராங்கன்னே தெரியல. அப்படி இப்படின்னு விலாவாரியா பேசுவாங்க. ஆனா உண்மையிலேயே பாடல்களைப் பொருத்தவரை இந்தக் காலத்தில் ஏன் வரவேற்பைப் பெறவில்லை என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு தகவலை ஒரு உதாரணத்துடன் அழகாக சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

பொதுவாக இன்றைய திரைப்படங்கள்ல பாடலுக்கு வரவேற்பு குறைந்து கொண்டு இருக்கிறது என்பது தெரிகிறது. ஏன் அப்படி வரவேற்பு குறைகிறது என்பதைப் பார்ப்போம். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம்.

இளையராஜா: மண்வாசனை படத்திற்காக பாடல் கம்போசிங் கன்னியாகுமரியில் தான் ஆரம்பித்தது. மாலை 6 மணிக்கு கம்போசிங்கை ஆரம்பித்தார் இளையராஜா. இரவு 9 மணிக்குள் 5 பாடல்களுக்கு இசை அமைத்து முடிந்தது. அதில் ஒன்றுதான் 'அரிசி குத்தும் அக்கா மகளே' பாடல். அதற்கான சிச்சுவேஷனே மண்வாசனையில் இல்லை.

மண்வாசனை: இளையராஜா ஒரு டியூன் அமைத்தார். அது ரொம்ப நல்லா இருந்தது. அதனால் அதை மிஸ் பண்ண வேண்டாம்னு நினைச்சேன். அதனால அந்தப் பாடலைப் பதிவு செய்தோம். அந்தப் பாடல்தான் அந்தப் படத்துக்காகப் படமாக்கப்பட்ட கடைசி பாடல்.


மிகப்பெரிய வெற்றி: அந்தப் பாடலை எந்த இடத்தில் பொருத்துவதுன்னு பாரதிராஜா யோசித்தார். கடைசியில் அதற்கான சரியான இடம் கிடைத்தது. அந்தப் பாடலுக்கான சூழலே படத்தில் இல்லை. இருந்தாலும் அந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் அதுக்கு மிக முக்கிய காரணம் அந்தப் பாடலை சரியான இடத்தில் பாரதிராஜா பொருத்தியதுதான்.

அதுமாதிரி பல பாடல்களை இன்றைய இயக்குனர்கள் சரியான இடத்தில் வைக்காமல் போவதுதான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாமல் போகிறது என்பதுதான் உண்மை. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Next Story