ஒற்றெழுத்தைப் போட்டு மாயவித்தை செய்த இளையராஜா... அட அந்தப் பாடலா?

by Sankaran |
ilaiyaraja
X

இசைஞானி இளையராஜா சிறந்த பாடகர், இசை அமைப்பாளர் மட்டும் அல்லாமல் சிறந்த பாடல் ஆசிரியரும் கூட. இவர் எழுதிய பாடல்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட் தான். இவர் பாடிய பாடல்கள் எல்லாமே வேற லெவல். குறிப்பாக இவரது

80ஸ் மற்றும் 90ஸ் ஹிட்ஸ் பாடல்கள் நம்மை இப்போதும் ரசிக்க வைக்கும் ரகங்கள்தான். இவர் பாடல் ஆசிரியர் என்பதால் பிற பாடலாசிரியர்கள் பாடலிலும் பிழை இருந்தால் தயங்காமல் சுட்டிக் காட்டுவார். இதனால் அந்தப் பாடல் மேலும் மெருகேறி விடுகிறது. அவற்றில் ஒன்றை இப்போது பார்ப்போம்.

இளையராஜாவைப் பொருத்தவரை பாடல்களில் சின்ன சின்ன திருத்தங்களைச் செய்வது வழக்கம். அப்படி செய்வது பாடலுக்குப் பொருத்தமானதாக அமைந்து விடுகிறது என்கிறார் பாடலாசிரியர் மு.மேத்தா.

சிறைக்கு வெளியில இருந்து ரேவதி பாட சிறைக்கு உள்ள இருந்து மோகன் உதயகீதம் படத்தில் பாடுவார். ரேவதி பாடிய பாடலுக்கு பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர என்று எழுதியிருந்தார் மேத்தா. மோகன் பாடுவதாகவும் அதே வரிகளை எழுதினார்.

அதைப் படித்துப் பார்த்த இளையராஜா 'மோகன் ஜெயிலுக்குள்ள இருக்காரு. அங்க எங்கிருந்து நிலா வரும்'னு கேட்டுள்ளார்.' ஜன்னல் வழியா வரும்ல'ன்னு மேத்தா அவருக்குப் பதில் சொன்னாராம். தொடர்ந்து 'இது வாதத்துக்கு வேண்டுமானால் சரியா இருக்கலாம். இந்தக் காட்சி அமைக்கு சரியா இருக்காது.


அதனால நீங்க எழுதி இருக்கிற அந்தப் பாடல் வரிகளில் 'பாடு நிலாவே' என்பதற்குப் பதில் பாடும் நிலாவே என்று ஒரு சின்ன திருத்தத்தைப் பண்ணினால் இந்தப் பாட்டு சரியா இருக்கும்'னு இளையராஜா சொல்ல உடனடியாக அதை ஆமோதித்துள்ளார் மேத்தா.

பாடல் வரிகளில் ஒற்றெழுத்தைச் சேர்த்து மாயவித்தையைச் செய்தவர் இசைஞானி. சின்ன மாற்றம்கூட கதைக்கும், பாடலுக்கும் மேன்மையை ஏற்படுத்தும் என்பதை இசைஞானி பல சந்தர்ப்பங்களில் இப்படி செய்து நிரூபித்துள்ளார் என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார் மு.மேத்தா. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Next Story