ஸ்ரீதர் படத்துக்கு இசை அமைக்க மறுத்த இளையராஜா... அவரு சொல்றதும் நியாயம்தானே..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இளையராஜா, இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோரைப் பற்றி பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
இன்னும் வயசாகல: ரஜினிக்கு இப்போ 74வயசாகுது. இப்பவும் கூலி, ஜெயிலர் 2ன்னு ஓடி ஓடி நடிச்சிக்கிட்டு இருக்காரு. அதுக்குக் காரணம் அவரது மனம் தான். அதற்கு இன்னும் வயசாகவில்லை. அந்தக் காலகட்டத்திலேயே ரஜினி விமானத்தில் பறந்து பறந்து பல படங்கள் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்த படங்களில் முக்கியமானவை மாங்குடி மைனர், இளமை ஊஞ்சலாடுகிறது.
இதுல ஸ்ரீதர் இயக்கிய படம்தான் இளமை ஊஞ்சலாடுகிறது. இந்தப் படத்துக்கு முதலில் அவர் இளையராஜாவிடம் மியூசிக் போடக் கேட்டுள்ளார். அவரோ என்னால் முடியாதுன்னு மறுத்தாராம்.
மறுத்த இளையராஜா: என்னன்னு கேட்டப்ப, இளையராஜாவின் மானசீக குரு மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன். அவரது தீவிர ரசிகராகவும் இருந்தார். ஸ்ரீதரின் படங்களுக்கு எல்லாம் எம்எஸ்விதான் இசை அமைப்பாளர். 'இவ்வளவு நாள் அவரை வச்சி மியூசிக் பண்ணிட்டீங்க. அதனால நான் பண்ண மாட்டேன்.

அண்ணா ஏதாவது கோவிச்சுக்குவாரு. அவரு இன்னைக்கும் லைம்லைட்ல இருக்காரு'ன்னு சொன்னார் இளையராஜா. உடனே ஸ்ரீதரின் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து இளையராஜாவிடம் பேசுறாங்க. அப்போ சந்தானபாரதி, பி.வாசு ஸ்ரீதரிடம் அசிஸ்டண்ட்களாக இருந்தார்கள். அவர்களும் போய் இளையராஜாவிடம் சொல்லி, ஒரு வழியா இசை அமைக்க சம்மதம் வாங்கிக் கொடுத்தார்களாம்.
துடிக்கும் கரங்கள்: அந்தப் படத்தில் பாட்டு எல்லாம் சூப்பர் ஹிட். அதே நேரம் துடிக்கும் கரங்கள் படத்துக்கு இளையராஜா இசை அமைக்கவில்லை. அப்போது ஸ்ரீதர் இசை அமைப்பாளராக பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியனை அறிமுகப்படுத்துகிறார். அந்தப் படத்திலும் பாடல் சூப்பர்ஹிட் ஆனது.
ஸ்ரீதர் ஆசை: அப்புறம் ரஜினி அபாரமான வளர்ச்சியை அடைந்து விட்டார். இந்த நிலையில் மறுபடியும் ரஜினியுடன் படம் பண்ணுவதற்கு ஸ்ரீதர் ஆசைப்படுகிறார். அதே நேரம் ரஜினியும் ஒத்துக்கிடறாரு. அப்போது புறம்பேசுபவர்கள், கோள் மூட்டுறவங்க எல்லாம் சேர்ந்து ரஜினியிடம் ஸ்ரீதர் முன்ன மாதிரி எல்லாம் கிடையாது சார். இப்ப அப்டேட்ல இல்லன்னு சொல்லி கலைச்சி விட்டுட்டாங்களாம்.
நிரூபித்த ஸ்ரீதர்: அதனால ரஜினியும் நடிக்க மறுத்துவிட்டாராம். அந்த நேரம் ஸ்ரீதர் டென்சனாகி மோகனை வைத்து எடுத்த படம்தான் தென்றலே என்னைத் தொடு. நான் இன்னும் லைம்லைட்ல தான் இருக்கேன்னு நிரூபித்தார் ஸ்ரீதர் என்றே சொல்லலாம். அந்தப் படம் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேல் ஓடி அபார வெற்றி பெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.