2 மணி நேரத்தில் 6 பாடல்கள்! இயக்குனருக்கு ஷாக் கொடுத்த இளையராஜா!.. அட நம்ம கமல் படம்!..
Ilayaraja: இளையராஜா திறமையான இசையமைப்பாளர் மட்டுமில்லை. மிகவும் வேகமாக இசையமைக்க கூடியவர். 80,90களில் அவரால் இசையமைக்கப்பட்டு இப்போது வரை 70 மற்றும் 80 கிட்ஸ்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வரும் பல பாடல்கள் சில மணி நேரங்களில் அவரால் உருவானவைதான்.
இசை என்பது அவரின் மூளையில் மட்டுமில்லை உடல் முழுவதும் இருக்கிறது என சிலர் சொல்வார்கள். இயக்குனருக்கு என்ன தேவை என்பதை மிகவும் வேகமாக கிரகித்து பாட்டு போட்டு கொடுத்துவிடுவார். இப்போதுள்ள் இசையமைப்பாளர்களை போல ஒரு படத்திற்கு இசையமைக்க பல மாதங்கள் எடுப்பது போல இளையராஜா எடுத்துக்கொண்டதே கிடையாது.
இளையராஜா: வாரத்தில் 3 நாட்கள் படங்களுக்கு டியூன் போட்டு அதை ரிக்கார்டிங் செய்தால் மீதி 3 நாட்கள் ஒரு படத்திற்கு பின்னணி இசையை அமைத்துவிடுவார். அதனால்தான் 80களில் அத்தனை தயாரிப்பாளர்களும் அவருக்காக தவம் கிடந்தார்கள். காலத்தில் மரணிக்காத பல அற்புதமான மெலடிகளை சில நிமிடங்களில் அவர் இசையமைத்திருக்கிறார்.
சின்னத்தம்பி: மதிய உணவு இடைவேளையின்போது உணவு வர தாமதமானபோது பி.வாசுவை அழைத்து 9 பாடல்களை போட்டு கொடுத்தார். அதுதான் சின்னத்தம்பி படத்தில் வந்து ஹிட் அடித்தது. இப்போதும் குழந்தைகள் கூட பாடும் குணா படத்தின் பாடல்களுக்கு மெட்டமைக்க 2 மணி நேரம் மட்டுமே அவர் எடுத்துகொண்டார்.
பாலச்சந்தர்: இளையராஜா மெட்டு போடும் வேகம் இயக்குனர் சிகரம் பாலச்சந்தரையே ஆச்சர்யப்படுத்திய சம்பவம் பற்றி இங்கு பார்ப்போம். கமல் நடிப்பில் அவர் இயக்கிய புன்னகை மன்னன் படத்திற்கான கம்போசிங் மதுரை ஆர்த்தி ஹோட்டலில் நடந்தது. காலை 10 மணியளவில் என்ன மாதிரியான சூழ்நிலைகளில் பாடல்கள் வருகிற என இளையராஜாவிடம் சொல்லிவிட்டு எப்படியும் ஒரு நாள் ஆகும் என நினைத்து மதுரை சுற்ற வெளியே போய்விட்டார் பாலச்சந்தர்.
புன்னகை மன்னன்: ஆனால், 2 மணி நேரத்தில் இளையராஜாவிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அங்கே போன பாலச்சந்தருக்கு பெரிய ஷாக். ஏனெனில், படத்திற்கு தேவையான 6 பாடல்களையும் முடிந்திருந்தார் இளையராஜா. பின்னாளில் பாலச்சந்தர் புதுப்புது அர்த்தங்கள் படமெடுக்கும்போது ராஜா இல்லாததால் அந்த படத்திற்கு அவர் போட்ட சில டியூன்களை பின்னணி இசைக்கு பாலச்சந்தர் பயன்படுத்த இதில் கோபமடைந்த ராஜா இனிமேல் ‘பாலச்சந்தருக்கு இசையமைக்க மாட்டேன்’ என சொல்லிவிட்டார். அதுதான் பாலச்சந்தரும் இளையராஜாவும் ஒன்றாக பணிபுரிந்த கடைசி திரைப்படம். அதேபோல், தான் ரோஜா படத்தை தயாரித்த போது ரஹ்மானை அறிமுகம் செய்து வைத்தவரும் பாலச்சந்தர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.