கல்யாணத்துக்கு இளையராஜா போட்ட கண்டிஷன்!. டெரர் பீஸா இருப்பார் போலயே!....

ilayaraja
Ilayaraja: இளையராஜா எப்படிப்பட்ட சுபாவம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். மற்ற நேரத்தில் கொஞ்சம் ஜாலியாக பேசினாலும் வேலை என வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பாக இருப்பார். அவரது மனம், உடல் என எல்லாமே இயங்குவது இசையில்தான். எப்போதும் அவரின் மூளை இசையை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதால்தான் அவரால் இப்படிப்பட்ட பாடல்களை கொடுக்க முடிந்தது.
இளையராஜா பற்றி அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு அவரை பற்றி தெரியும். கமல் கூட ஒருமுறை ‘இளையராஜா கரடு முரடானவர் என சிலர் சொல்வார்கள். சிலரோ அவர் பலாப்பழம் போல. மேலே முள். உள்ளே இனிப்பு என்பார்கள். என்னைக்கேட்டால் மேலே, உள்ளே என அவர் முழுக்க இனிப்புதான். உன் நாக்கில் முள்ளிருந்தால் என்ன செய்ய முடியும்’ என்பதுதான் என் கருத்து’ என பேசியிருந்தார்.
இளையராஜா காசு விஷயத்தில் கறார் பேர் வழி என பலரும் சொல்வர்கள். சம்பள விஷயத்தில் கோபப்பட்டுதான் பாட்ஷா படத்தில் ரஜினியுடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. அதனால்தான் அப்படத்திற்கு தேவா இசையமைத்தார். அந்த படத்திற்கு பின் அவர் ரஜினிக்கு இளையராஜா இசையமைக்கவே இல்லை. அதேநேரம், சம்பளமே வாங்காமல் அவர் பல படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.
அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி கூட அவர் பதில் சொல்வது இல்லை. நான் முழுக்க ஆன்மிகம் மற்றும் இசை என மூழ்கிவிட்டேன். என்னைப்பற்றி வரும் விமர்சனங்களை நான் கண்டு கொள்வது இல்லை. நான் சாதித்து காட்டியிருக்கிறேன். அதனால், எனக்குதான் தலைக்கணம் இருக்கத்தான் செய்யும். எதையுமே சாதிக்காத நீ என்னை பற்றி பேசுகிறாய் என பதில் சொன்னவர் இளையராஜா.
இந்நிலையில், உங்கள் மனைவி பற்றி சொல்லுங்கள் என ஊடகம் ஒன்றில் கேட்டதற்கு ‘ என் மனைவி என் உறவுக்காரர். என் அக்கா மகள். எங்கள் இருவரின் ஜாதகத்தையும் பார்த்துவிட்டு இந்த பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என என் பெற்றோர்கள் முடிவு செய்தனர். சென்னையிலிருந்து என்னை கிளம்பி வர சொன்னார்கள்.
சென்னையில் என்னை பீச்சுக்கு கூட்டிக்கொண்டு போ, பார்க்குக்கு கூட்டிட்டு போ.. தியேட்டருக்கு கூட்டிட்டு போய் என்றெல்லாம் ஜீவா என்னை கேட்டால் அடுத்த பஸ்ஸிலேயே கூட்டி வந்து இங்கு விட்டுவிடுவேன் என கண்டிஷன் போட்டேன். நான் இப்படி சொல்கிறேன் என பயமுறுத்தித்தான் ஜீவாவை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஒரு மனைவியாக தனது கடமையை அவர் சரியாக செய்துவிட்டார்’ என பேசியிருந்தார்.