என்கிட்ட அதான் பிரச்சனை.. ரஜினி மேலே போய்ட்டார்!.. நண்பரிடம் புலம்பிய கமல்!...

by MURUGAN |
rajini kamal
X

Rajini Kamal: நடிகர் ரஜினி சினிமாவில் நடிக்க வந்தபோது கமல் ஒரு பெரிய ஸ்டாராக இருந்தார். ஏனெனில், கமல் சின்ன வயதிலிருந்தே சினிமாவில் இருந்தவர். இயக்குனர் பாலச்சந்தர் கமலை ஒரு முழு நடிகராக மாற்றி தனது படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்துக்கொண்டிருந்தார். அப்படி கமல் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து அறிமுகமானவர்தான் ரஜினி.

ரஜினியே கமலின் ரசிகர்களில் ஒருவராகவே இருந்திருக்கிறார். கமல் - ரஜினி இணைந்து நடிக்கும் படங்கள் வெற்றி பெறவே அதையே எல்லா தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் செய்தார்கள். நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, ஆடு புலி ஆட்டம், பதினாறு வயதினிலே என இது தொடர்ந்துகொண்டு வந்தது. ஒருகட்டத்தில் ‘இது வேண்டாம்’ என கமல் முடிவு செய்தார்.


எனவே ரஜினியும், கமலும் தனித்தனியாக பயணிக்க துவங்கினார்கள். ரஜினி பக்கா கமர்ஷியல் படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து வசூல் சக்ரவர்த்தியாக மாறி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். கமலுக்கு கமர்ஷியல் படங்களை விட கலை நயம் மிக்க, நடிப்புக்கு தீனி போடும் நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வமே அதிகமாக இருந்தது. அதனால் ரஜினி மாஸ் நடிகராகவும், கமல் கிளாஸ் நடிகராகவும் மாறினார்கள். கமல் பல விதமான மேக்கப்புகளை போட்டு நடித்தால் ரஜியோ சிம்பிளாக ஸ்டைல் செய்து ஹிட் கொடுத்தார்.

ரஜினியின் எங்கேயோ கேட்ட குரல் படம் வந்தபோது அதற்கு போட்டியாக வெளிவந்த கமலின் சகலகலா வல்லவன் படம் வசூலில் சக்கை போட்டு போட்டது. ஆனாலும், கமலால் ரஜினியை தாண்ட முடியவில்லை. அதற்கு காரணம் ரஜினி தேர்ந்தெடுத்த பாதை. கமலின் நாயகன் வந்தபோது அப்படத்தோடு போட்டி போட்ட ரஜினியின் மனிதன் படம் அதிக வசூல் செய்தது. குணா படத்தோடு போட்டி போட்ட தளபதி படம் அதிக வசூலை பெற்றது. சிவாஜி சிறந்த நடிகர் என்றாலும் எம்.ஜி.ஆரின் மாஸை சிவாஜியால் தொட முடியவில்லை. சிவாஜிக்கு என்ன நேர்ந்ததோ அதுதான் கமலுக்கும் நேர்ந்தது.


கமலை விட பல மடங்கு அதிக சம்பளம் வாங்கினார் ரஜினி. ரஜினி படங்கள் கமல் படங்களை விட அதிக வசூல் செய்கிறது. இது கமலுக்கும் தெரியும். பல வருடங்கள் கழித்து விக்ரம் எனும் ஒரே ஒரு ஹிட்டை மட்டுமே கொடுத்திருக்கிறார் கமல். அதன்பின் வெளியான இந்தியன் 2, தக் லைப் ஆகிய படங்கள் ஓடவில்லை.

இந்நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி ஊடகம் ஒன்றில் ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார். ஒருமுறை என் நண்பர் ஒருவரிடம் கமல் பேசிக்கொண்டிருந்த போது ‘என்னை விட ரஜினி அதிக உயரத்திற்கு போனதற்கு காரணம் என்னுடைய தோலின் நிறம்தான். அவர் கருப்பு என்பதால் ‘இவர் நம்மாளு’ என மக்கள் அவரை கொண்டாடி மேலே கொண்டு சென்றுவிட்டார்கள். நான் வெள்ளை என்பதால் என்னை விலக்கி வைத்துவிட்டார்கள் என கூறியிருக்கிறார். ரஜினியை போல நாம் சூப்பர் ஸ்டார் ஆக முடியவில்லையே என்கிற கோபமும், ஆதங்கமும் கமலுக்கு இப்போதும் இருக்கிறது’ என பிஸ்மி பேசியிருக்கிறார்.

Next Story