கமலின் பேசும்படத்துல இவ்ளோ சிறப்புகளா? யாராவது இதைக் கவனிச்சீங்களா?

by Sankaran |
pesum padam
X

கமல் படம் என்றாலே ரசிகர்கள் உற்றுநோக்கித் தான் பார்ப்பார்கள். மனுஷன் ஏதாவது ஒரு வித்தியாசத்தைக் காட்டி இருப்பாருன்னு தெரியும். அந்த வகையில் படத்துக்குப் படம் வித்தியாசத்தை எங்காவது ஒரு இடத்துல காட்டி இருப்பாரு கமல். அந்த மாதிரி தான் இந்தப் படமும். இதுல அவர் என்ன வித்தியாசம் காட்டுறாரு? கதை என்னன்னு பார்க்கலாமா...

ஊமைப்படங்கள்: 1931ல் தான் தமிழ்சினிமா பேசத் தொடங்கியது. அதற்கு முன்னாலே எல்லாமே ஊமைப்படங்கள். தமிழ்சினிமா பேசத் தொடங்கியதற்குப் பின்னாலே ஊமைப்படங்களின் தயாரிப்பு அடியோடு நின்று போனது. அதுபோன்ற படங்களிலே நடித்த கதாநாயகர்களும் ஒதுக்கப்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு: மௌனப்படங்களின் யுகம் முடிந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு முழுநீள மவுனப்படமாக வந்ததுதான் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய பேசும் படம். கமல், அமலா உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு காதல் படம் என்றாலும் அதற்குள்ளும் ஒரு வில்லன் உண்டு. பணக்கார கணவனைக் கொல்ல அவனது மனைவி முயற்சிக்கிறாள்.

மவுனப்படங்கள்: கணவனைக் கொல்வதற்காக அவர் அனுப்பிய ஆள் கமலைப் பணக்காரன் என்று நினைத்து அவரைக் கொல்ல முயற்சி செய்கிறார். மவுனப்படங்கள் காலத்தில் பெரும்பாலான படங்கள் ஒன்றிரண்டு வீதிகள், கடைகள், மது விடுதி அல்லது பங்களாவில்தான் படமாக்கப்பட்டன.


இசையின் பங்கு: பேசும் படமும் அதுபோலத்தான் படமானது. ஆனந்த பவன் என்ற கமல் குடியிருக்கும் இடம், வீதி, சிக்னல் மற்றும் புஷ்பக் என்ற ஸ்டார் ஓட்டல் என குறிப்பிட்ட தளத்திற்குள்ளாகவே கதை நிகழ்கிறது. மௌனப்படங்கள்ல இசையின் பங்கு ரொம்ப முக்கியமானது. பேசும் படத்திற்கு இசை அமைப்பாளர் எல்.வைத்தியநாதன் அந்தப் பணியை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.

தமிழ்சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் கமல் எப்பவுமே முதலிடத்தில் இருப்பார். அந்த வகையில் கமலின் பேசும்படம் ஒரு முக்கியமான படம் என்று பிரபல சினிமா பட தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Next Story