ராமராஜனின் வீழ்ச்சிக்குக் காரணம் கரகாட்டக்காரனா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?
மக்கள் நாயகன் ராமராஜனின் வளர்ச்சி, வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
பொண்ணு பிடிச்சிருக்கு: ராமராஜன் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் இளையராஜாவின் பாடல்கள் 50 சதவீதம் காரணமாக இருந்தது. அவர் ஒரு இயக்குனர். நடிகர் ஆகிறார். பொண்ணு பிடிச்சிருக்கு என்ற படத்தை இயக்குகிறார். கங்கை அமரன் இசை அமைக்கிறார். ஆரம்பகாலத்தில் இளையராஜா, கங்கை அமரனின் இசைக்கு பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. ரொம்ப இசைநுட்பம் தெரிந்தவர்களால்தான் கண்டுபிடிக்க முடியும்.
கிராமத்துப் படங்கள்: 87ல் எங்க ஊரு பாட்டுக்காரன் ரிலீஸ். அதுல டவுசர் போட்டு பனியன் கூட போடாம துண்டு மட்டும் போட்டு நடிக்கிறார். அப்படி எந்த ஒரு கதாநாயகனும் நடிக்கல. ராமராஜனுக்கு ஒரு பிளஸ் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பாரதிராஜாவின் படங்கள் பல வந்தன. அவை கிராமத்துப் படங்களாகவே இருந்தன. பாண்டியன் படங்களும் கிராமத்துப் படங்களாகவே இருக்கும்.
டைட்டில் பாடல்: பொங்கி வரும் காவேரி படத்தில் அத்தனைப் பாடல்களும் ஹிட். ராமராஜன் தான் நடித்து இருப்பார். அந்தப் படத்துல இளையராஜா டைட்டில்ல ஒரு பாடல் வச்சிருப்பாரு. 'இந்த ராசாவை நம்பி வந்த யாரும் மோசமே போனதில்ல'ன்னு அவருக்கே உரிய பாடல் வரும்.
டவுசர்: ராமராஜனை கிராமத்து கதாநாயகனாகவே பார்த்துப் பழகிவிட்டு நகரத்துக் கதாநாயகனாக வந்தால் மனசு ஏத்துக்காது. எங்க ஊரு பாட்டுக்காரன் படத்து இருந்துதான் அவருக்கு டவுசர்ங்கற பேரே வர ஆரம்பிச்சது. பாட்டு எல்லாமே சூப்பரா இருக்கும்.
செண்பகமே செண்பகமே: ராமராஜனுக்கு அதிகபட்ச படங்கள் இளையராஜா தான் பண்ணிருப்பாரு. கரகாட்டக்காரன் படத்துக்கு முன்னாடி இன்னொரு கரகாட்டக்கார கோஷ்டி அந்தப் படத்துல ராமராஜன் வருவாரு. அதுதான் செண்பகமே செண்பகமே. அதுல சில்க் கரகம் ஆடுவார். ராமராஜன் ஆட மாட்டார்.
கரகாட்டக்காரன்: ராமராஜனின் உச்சம்... என்னை சொல்லப்போனா தமிழ்சினிமாவின் உச்சம் 500 நாள் ஓடிய படம் கரகாட்டக்காரன். கங்கை அமரனின் இயக்கம்தான் காரணம். இன்னைக்குப் பார்த்தாலும் அந்தப் படம் ரசிக்க வைக்கும். அவ்வளவு கலகலப்பா இருக்கும்.
இந்தப் படத்தை இளையராஜா, கவுண்டமணியைக் கழிச்சிட்டு பார்க்கவே முடியாது. ராமராஜனைத் தூக்கிட்டு இன்னொரு ஹீரோவைப் போட்டாலும் படம் வெற்றி தான். ராமராஜனுக்கு டான்ஸ் பண்ணத் தெரியாது.
கங்கை அமரன்: கரகாட்டக் கலைஞனா வந்தா டான்ஸ் ஆடத் தெரியணும். ராமராஜன் கரகத்தை வச்சிக்கிட்டு ரொம்ப முயற்சி பண்ணிருப்பாரு. நீங்க ஒண்ணும் செய்ய வேணாம். நான் பார்த்துக்கறேன்னு கங்கை அமரன் சொல்லிருப்பாரு. கரகாட்டமே ஆடத்தெரியாத ஒருவரை நடிக்க வைத்து படத்தை 500 நாள் ஓட வச்சாரு கங்கை அமரன்.
வறுமையைச் சொல்லல: படத்துல உண்மையான கரகாட்டக்காரர்களின் வறுமையை எடுத்துச் சொல்லவில்லை. ஆனா இது சக்சஸ் ஆக காரணம் செந்தில், கவுண்டமணி காமெடி. திரைக்கதை. அதையும் தாண்டி இசைஞானியின் இசை. அவரைத்தவிர வேறு யாரும் இப்படி ஒரு இசையைக் கொடுக்க முடியாது. ஏன்னா அவருக்குத்தான் அந்த நுட்பம், வாழ்வியல் தெரியும்.
வீழ்ச்சி: ராமராஜனும் படத்தில் அற்புதமாக நடிச்சிருப்பாரு. அவருக்கு உச்சமும் அதுதான். வீழ்ச்சியும் அதுதான். அதன்பிறகு அவருக்கு எந்தப் படமும் பெரிய அளவில் ஓடவில்லை. நடிச்சா ஹீரோவாகத் தான் நடிப்பேன்னு இருக்காரு. சாமானியன்கூட பெரிய அளவில் போகல. எம்ஜிஆருக்கு இருந்த பண்புகள் அவரிடம் உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.