கலைஞரைக் கடுமையாக விமர்சனம் செய்த கண்ணதாசன்... ஆனா அவரோட பதிலைப் பாருங்க...!
கவியரசர் கண்ணதாசனும், கலைஞர் கருணாநிதி அவர்களும் வாடா போடா அப்படிங்கற அளவுக்கு நெருக்கமான நண்பர்கள். ஒரே தட்டுல சாப்பிட்டு, ஒரே படுக்கையில படுத்து ஒண்ணா அலைஞ்சி வாய்ப்புத் தேடியவர்கள். இவங்க நட்புல எப்படி விரிசல் ஆரம்பித்ததுன்னு பார்க்கலாமா...
இல்லற ஜோதி
கலைஞருக்கும், கண்ணதாசனுக்கும் ஒரு இயல்பான பழக்கம் உண்டு. இருவரும் தங்களது படைப்பை ஒருவருக்கொருவர் படித்துப் பார்த்து சரிபார்த்துக் கொள்வார்கள். இல்லற ஜோதி படத்துக்கு வசனம் எழுதினார் கண்ணதாசன். அந்த சமயம் கலைஞர் திமுக சார்பில் நடந்த ஒரு களப்பணிப் போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கிறார்.
அப்போது இல்லற ஜோதி படத்திற்கான அந்த வசனத்தை கலைஞரிடம் கொடுத்து சரிபார்க்க வேண்டும் என்று எண்ணி ஒரு நபரிடம் கொடுத்து அனுப்புகிறார். அவரோ நீங்க இல்லாத நேரத்துல கண்ணதாசன் வசனம் எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாருன்னு சொல்கிறார்.
அப்படி சொன்னதும் கலைஞர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அதைப் பார்க்காமலேயே திருப்பி அனுப்புகிறார். அந்த நேரத்துல இல்லற ஜோதிக்கான பட வேலைகள் முக்கால்வாசி முடிந்துவிட்டது. அந்த நேரம் கண்ணதாசனுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அதே சமயம் தண்டனை காலம் முடிந்து கலைஞர் சிறையில் இருந்து வெளியேறுகிறார்.
அனார்கலி
இல்லற ஜோதி படத்தில் அனார்கலி நாடகத்தையும் உள்ளே எழுதி இருந்தார் கண்ணதாசன். அதைப் பார்த்த இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா இதை கலைஞரை விட்டுத் திருத்தச் சொல்லலாமா என கண்ணதாசனிடம் கேட்கிறார். அதற்கு எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. தாராளமாக அவர் திருத்தட்டும். என்கிறார் கவியரசர்.
முரெசொலி
அந்த வகையில் கலைஞரும் அந்த நாடகத்தில் பல திருத்தங்களை செய்கிறார். அந்தநேரத்தில் முரெசொலி பத்திரிகையிலும் திருத்தப்பட்ட அனார்கலி நாடகத்தைப் பிரசுரம் பண்ணுகிறார். அதற்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது. சிறையில் இருந்த கண்ணதாசனுக்கு படம் எப்படி இருக்கும்னு தெரியலயே. கலைஞர் எப்படி மாற்றி இருக்கிறார்னு தெரியலையேன்னு மனதுக்குள் ஒரே வலி.
தென்றல்
ஒரு நபரிடம் பணத்தைக் கொடுத்து படத்தை பார்த்துவிட்டு வரச் சொல்கிறார். அவர் பார்த்துவிட்டு வந்து 'பலரும் 'ஆகா, ஓகோ'ன்னு போகுதுன்னு சொல்றாங்க. ஆனா உண்மை என்னன்னா படம் ரொம்ப சுமார்'தான்னு சொல்றாரு. தண்டனை காலம் முடிந்து கவியரசர் வெளியே வர்றாரு. தென்றல் பத்திரிகை ஆரம்பிக்கிறாரு.
அதுல தன்னோட அனார்கலி நாடகத்தைப் பிரசுரம் பண்றாரு. இதற்கு நடுவில் போட்டி வருகிறது. கவியரசரின் நாடகமா, கண்ணதாசனின் நாடகமா என இருவருடைய நாடகங்களுக்கும் மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் வருகிறது.
அதேநேரம் 'நான்தான் கலைஞரைப் பற்றி அதிக விமரசனம் பண்ணினேன். அதனால் தான் அவர் என்னை எதிர்விமர்சனம் பண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது' என்கிறார். ஒருத்தரை எந்தளவுக்கு கண்ணதாசன் உயர்த்துவாரோ, அந்தளவுக்கு யோசிக்காம கீழே போட்டுருவாரு என்றார் கலைஞர். இப்படி இருவருக்கும் விமர்சனத் தாக்குதல்கள் நடக்கிறது.
விமர்சனத்துக்கு தப்பவில்லை
இவரது விமர்சனத்துக்கு நான் மட்டுமல்ல. நேரு, அண்ணா, இந்திரா, மறைந்த எம்ஜிஆர் உள்பட யாரும் இவரது விமர்சனத்துக்கு தப்பவில்லை. அதே நேரம் யாரும் எதிர்விமர்சனம் செய்யல. அதுக்குக் காரணம் அவரிடம் இருந்த தமிழ்ப்பற்றுதான் என்றார். 1967ல் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது சைக்கிள் ஓட்டுபவர்களும் ஹெல்மட் அணிய வேண்டும் என ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதுல ஏதோ உள்நோக்கம் இருக்குன்னு கண்ணதாசன் விமர்சனம் செய்தார். அது வழக்கில் போய் முடிகிறது. அப்புறம் கண்ணதாசன் தான் செய்தது தப்புதான் என்று ஒத்துக் கொள்கிறார். அந்த விமர்சனத்துக்கு மறுப்பும் தெரிவிக்கிறார். இருவரும் நேரில் பார்த்தால் கூட பேசாத அளவுக்கு பகைமை வளர்கிறது.
கிராஸ்டாக்கில் கண்ணதாசன்
அந்த நேரத்தில் ஒரு சுவாரசியம் நடக்கிறது. கலைஞர் ஒரு ஓட்டலில் உட்கார்ந்து ஒரு படத்துக்கு வசனம் எழுதுகிறார். அப்போது வரும் ஒரு தொலைபேசி அழைப்பில் கிராஸ்டாக் ஆகிறது. அது பரிச்சயமான குரல். அப்புறம்தான் அது கண்ணதாசனின் குரல் என்று தெரிகிறது. இருவரும் நலம் விசாரிக்கிறார்கள்.
'சரி. போன்லயாவது பேசலாமா...'ன்னு கேட்கிறார் கலைஞர். அதுக்கு கண்ணதாசன், 'சரிய்யா பேசுவோம்... நான் உன்னைப் பத்தி நிறைய விமர்சனம் பண்றேனே. உனக்குக் கோபமே வரலையா...'ன்னு கேட்கிறார். 'விமர்சனம் கடுமையாகத்தான் பண்றே. ஆனா எனக்குக் கோபம் வரலையா...'ன்னு சொல்றார் கலைஞர். 'ஏன்யா..?'ன்னு கேட்கிறார்.
'உன்னோட தமிழ் தேன்சொட்டுற மாதிரி இருக்கு. அதனால நீ எந்தளவுக்கு என்னை விமர்சனம் பண்ணினாலும் நான் பொருட்படுத்துறதே இல்ல'ன்னு சொல்கிறார் கலைஞர். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.