ரஹ்மான் பாட்டு கொடுக்கல.. வரியை வச்சே படமாக்குனோம்.. எந்தளவுக்கு ஹிட் பாருங்க

by Rohini |
rahman
X

டிரெண்ட் செட்டர் உருவாக்கிய் பாரதிராஜா: ரகுமான் கொடுக்க வேண்டிய பாடல் நினைத்த நேரத்தில் வராததால் வெறும் பாட்டு வரியாலையே அந்த பாடல் காட்சியை படமாக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமாக திகழ்ந்து வருபவர் பாரதிராஜா. ஒரு காலத்தில் திரைப்படம் என்பது சென்டிமென்ட், சண்டைக்காட்சி ,காதல் என இதை ஒட்டியே வெளியாகி வந்தது. ஆனால் அந்த பிம்பத்தையே மாற்றி தனக்கென ஒரு தனி ட்ரெண்ட் செட்டரை உருவாக்கியவர் பாரதிராஜா.

கிராமம் தான் ஹைலைட்: கிராமத்து கதைகளை மையப்படுத்தி நவநாகரிகத்தில் கிராமத்து மண்வாசனையையும் மக்கள் அறிய வேண்டும் என்பதை மனதில் வைத்து அந்த மாதிரி படங்களையே கொடுத்து தனக்கான தனி முத்திரை பதித்தார் பாரதிராஜா. அவர் படம் என்றாலே ஒரு கிராமம் இருக்கும். கிராமத்தில் எப்படி பேசுவார்கள்? எப்படி பழகுவார்கள்? எந்த மாதிரி பழக்க வழக்கங்கள் பின்பற்றப்படும் என்பதை தெள்ளத் தெளிவாக படங்களில் வைத்திருப்பார் பாரதிராஜா.

பாசமலரை மிஞ்சிய படம்: அதற்கு நிறைய படங்களை உதாரணமாக சொல்லலாம். அண்ணன் தங்கை பாசம் என்றால் அது பாசமலர் திரைப்படம் தான் என அனைவரும் நினைத்திருந்த காலம். அதை அப்படியே மாற்றினார். கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் விஜயகுமார் ராதிகா இவர்களுக்கு இடையேயான அண்ணன் தங்கை பாசம் பாசமலர் படத்தையே மறக்கச் செய்தது. கிழக்கு சீமையிலே படம் என்றாலே அதில் உள்ள பாடல்கள் தான் நம் நினைவிற்கு வரும்.

ஏஆர் ரஹ்மானா இப்படி செய்தார்?:படத்தில் அமைந்த அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். அந்த படத்திற்கு இசையமைத்தவர் ஏ ஆர் ரகுமான். ஆனால் ஒரு பாடல் படமாக்கும் போது சரியான நேரத்தில் ரகுமான் பாட்டு கொடுக்கவில்லை. ஷூட்டிங் ஆரம்பமாகி விட்டது. அதுவரை பாட்டு வரவில்லை. இதனால் பாரதிராஜா ஒரே டென்ஷனில் கத்தி விட்டார். இருந்தாலும் படமாக்கி விடுவோம் என வைரமுத்து எழுதிய அந்த வரிகளை வைத்துக்கொண்டு மட்டுமே வண்டியில் ஏறி அந்த பக்கம் இந்த பக்கம் போவது வருவது என ஃபுல் பாட்டையும் படமாக்கி விட்டார் பாரதிராஜா.


அதன் பிறகு அந்தப் பாட்டு எந்த அளவுக்கு ஹிட் ஆனது என அனைவருக்கும் தெரியும் என கத்தாழங்காட்டு வழி பாட்டை பற்றி நெப்போலியன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் அதன் பிறகு தான் ரகுமான் பாட்டை கொடுக்க அந்த இசையை காட்சிகளில் ஒன்றிணைத்து சேர்த்தார்கள் என்றும் கூறினார்.

Next Story