தெலுங்கு டைரக்டர்ஸ நம்பி ஹிட் கொடுத்த 3 கோலிவுட் ஹீரோக்கள்!.. குபேராவில் கலக்கிய தனுஷ்!...

80களில் ஹிந்தியில் ஹிட் அடிக்கும் படங்களை தமிழில் எடுப்பார்கள். இப்படி பல அமிதாப்பச்சன் படங்களில் ரஜினி நடித்திருக்கிறார். ரஜினி நடித்த பில்லா கூட ஹிந்தியில் அமிதாப் நடித்த படங்களில் ஒன்றுதான். கமல் எடுத்த குருதிப்புனல் படம் கூட ஹிந்தியில் வெளியான Drohkaal படத்தின் ரீமேக்தான். அதேநேரம், ஒருகட்டத்தில் அது கொஞ்சம் குறைந்தது.
அவ்வளவு ஏன்?.. ரஜினி அடித்த பாட்ஷா படம் கூட அமிதாப் நடித்த ஒரு படத்திலிருந்து சுட்ட கதைதான். இது ஒருபுறம் எனில், தமிழ் சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் இடையே ஒரு நெருங்கிய உறவு உண்டு. 80களில் நிறைய தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலை பெற்றது.
குறிப்பாக சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், விஜயசாந்தி, ராஜசேகர் போன்ற நடிகர்களின் படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோல், பாலையா என அழைக்கப்படும் பாலகிருஷ்ணாவின் படங்களும் தொடர்ந்து வெளியாகி வந்தது. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி2, ஆர்.ஆர்.ஆர். நான் ஈ போன்ற படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வசூலை அள்ளியது.
அதன்பின் நடிகர் பிரபாஸின் தெலுங்கு படங்களும் தொடர்ந்து தமிழில் வெளியாகி வருகிறது. புஷ்பா, புஷ்பா 2 இரண்டு படங்களும் வசூலில் சக்கை போடு போட்டது. தெலுங்கு பட இயக்குனர்களின் படங்கள் தமிழ்நாட்டிலும் நல்ல வசூலை பெறுவதால் அவர்களின் இயக்கத்தில் நடிக்கவும் தமிழ் சினிமா ஹீரோக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில், சில நடிகர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்.

கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கியவர் வம்சி. இந்த படத்தில் நாகார்ஜுனாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் ஹிட் அடித்தது. இதே இயக்குனரை நம்பி விஜய் நடித்து வெளியான வாரிசு படமும் நல்ல வசூலை பெற்றது.
அதேபோல், வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி படமும் தமிழில் நல்ல வசூலை பெற்றது. இந்த இயக்குனர்தான் துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

அதேபோல், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவை நம்பி தனுஷ் நடித்த படம்தான் குபேரா. இந்த படத்தில் நாகார்ஜுனவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். குபேரா படம் தமிழில் ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் ஹிட் அடித்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஹிட் படமாக மாறிவிட்டது. இப்படி தனுஷ், விஜய், கார்த்தி ஆகியோர் தெலுங்கு இயக்குனர்களை வைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால், தெலுங்கு இயக்குனர் கே.வி. அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.