என்னை புடவையில் அழகு பார்த்தவர் பாலசந்தர்.. கிளாமரிலிருந்து ஹோம்லிக்கு மாறிய நடிகை

by Rohini |
balachander
X

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்: சினிமாவில் சில பேரை அவர்களின் கேரக்டர்களில் இருந்து பிரித்து பார்க்க முடியாது. அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார்கள். அப்படி குணச்சித்திர கேரக்டர்களிலும் சைடு ஆர்ட்டிஸ்ட்டாகவும் பல படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை கே.எஸ்.ஜெயலட்சுமி. ஆரம்பத்தில் பல நாடகங்களில் நடித்து ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் செய்திருக்கிறார். இதன் மூலம் தான் கே.பாலசந்தருக்கு இவர் அறிமுகமாகியிருக்கிறார்.

தனி அக்கறை: ஏனெனில் கே.பாலசந்தரும் நீர்க்குமிழி படத்தை ஸ்டேஜில்தான் முதலில் அரங்கேற்றினார். அதன் பிறகுதான் படமாக்கினார். அதனால் நாடகம் என்பது பாலசந்தருக்கு அவரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிப்போனது. அதில் ஜெயலட்சுமியும் நாடகத்துறையில் இருந்து வந்தவர் என்பதால் அவர் மீது தனி அக்கறை ஏற்பட்டிருக்கிறது. கமல் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் திரைப்படத்தில் ரேவதிக்கு அம்மாவாக நடித்திருப்பார் ஜெயலட்சுமி.

ரேவதிக்கு அம்மாவா?:அந்தப் படத்தின் டப்பிங் சமயத்தில் டப்பிங் பேச வந்த ஜெயலட்சுமியிடம் பழம்பெரும் நடிகையான சண்முக சுந்தரி ‘ நீ ரேவதிக்கு அம்மாவா? இவ்ளோ சின்ன கேரக்டரில் அம்மாவா நடிக்கிறீயே? பார்ப்பதற்கு ரேவதியும் நீயும் ஒரே மாதிரிதான் இருப்பீங்க.. எப்படி நடிக்கிற’ என்று கேட்டாராம். எல்லாம் பாலச்சந்தர் சாருக்காகத்தான் என சொன்னாராம் ஜெயலட்சுமி.

கவுண்டமணியுடன் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்திருக்கிறார் ஜெயலட்சுமி. கவுண்டமணி மிகவும் தங்கமான ஆளு. அவரை மாதிரி ஒரு நல்ல மனுஷனை பார்க்கவே முடியாது என்று ஜெயலட்சுமி கூறியிருக்கிறார். இந்த நிலையில் கே. பாலசந்தர் மற்றொரு படத்தில் ஜெயலட்சுமிக்கு ஒரு அற்புதமான கேரக்டரை கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். அதுவரை ஜெயலட்சுமியை கிளாமர் நடிகையாகத்தான் பார்த்தார்களாம்.


ஏனெனில் அவருடைய முதல் படத்திலேயே கிளாமராகத்தான் நடித்திருக்கிறார். அதிலிருந்து எல்லா இயக்குனர்களும் இவரை கிளாமர் ரோலுக்குத்தான் அழைத்தார்களாம். ஆனால் பாலச்சந்தர் சார்தான் என்னை புடவையில் அழகு பார்த்தார் என்று ஜெயலட்சுமி கூறினார். ஏன் எஸ்.பி.முத்துராமன் கூட ஜெயலட்சுமியிடம் ‘எங்களுக்கெல்லாம் கிளாமராக தெரிஞ்ச நீ எப்படி பாலசந்தருக்கு மட்டும் புடவையில் தெரிஞ்ச?’ என கேட்டாராம்.

Next Story