இளையராஜாகிட்ட தேவா மாதிரி பாட்டு வேணும்னு சொன்னா நடக்குமா? ஆனா கொடுத்தாரே ஒரு பாட்டு

by Rohini |
deva
X

சரஸ்வதி குடி கொண்டிருக்கிறாள்: தமிழ் சினிமாவில் இளையராஜாவை இசையின் கடவுள் என்றேதான் அனைவரும் பார்க்கிறார்கள். அவரிடம் சரஸ்வதி சரளமாக உட்கார்ந்து வீணை வாசித்துக் கொண்டிருக்கிறாள் என்றுதான் அனைவரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கை வீண்போகாதவகையில் இளையராஜாவிடமிருந்து எப்பேற்பட்ட இசை வேண்டுமென்றாலும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதுவும் அரைமணி நேரத்தில் இரண்டு பாடல் , இரண்டு நாள்களில் 5 படங்களுக்கு பாடல்கள் என ஒரு காலத்தில் இசையில் புகுந்து விளையாடிக் கொண்டிருந்தவர் இளையராஜா. அவர் வீட்டின் முன் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என காத்துக் கிடந்தவர்கள் ஏராளம். ஏன் காரில் வரும் போதும் போகும் போதும் கூட இளையராஜாவை பார்த்துவிட மாட்டோமா என்று தவித்தவர்களும் ஏராளம்.

அப்படி ஒரு பாடல்: அந்த வகையில் கே.எஸ்.ரவிக்குமார் இளையராஜாவுடனான தனது அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.சக்திவேல் படத்திற்காக இளையராஜாவிடம் பாட்டு கேட்பதற்காக ஏவிஎம் சரவணன் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் சென்றிருக்கிறார்கள். அதற்கு முன்பே ஏவிஎம் சரவணன் புருஷ லட்சணம் படத்தில் குஷ்பூ பாடும் சாமி பாடல் மாதிரி ஒரு பாட்டு கிடைத்தால் நன்றாக இருக்கும் என கே.எஸ்.ரவிக்குமாரிடம் சொல்லியிருந்தாராம்.

தேவா மாதிரி பாட்டு: ரிக்கார்டிங் தியேட்டருக்குள் போனதும் எந்த மாதிரியான பாடல் வேண்டும்? ஏதாவது ரிஃபெரன்ஸ் இருக்காயா என்று கே.எஸ்.ரவிக்குமாரிடம் இளையராஜா கேட்டிருக்கிறார். உடனே கே.எஸ்.ரவிக்குமார் புருஷ லட்சணம் படத்தில் அமைந்த கொல வெறியம்மா ராஜகாளியம்மா பாடலை பாடி இப்படி மாதிரியான ஒரு பாடல் வேண்டும் என்று சொன்னாராம். இதை கேட்டதும் ஏவிஎம் சரவணனுக்கு ஒரே படபடப்பு.

சுதாரித்துக் கொண்ட ரவிக்குமார்: ரவிக்குமாரை அழைத்து ஏன்யா அவர்கிட்ட போய் தேவா பாடலை பாடி அதே மாதிரி வேணும்னு கேட்குற? ஒன்னு அவர் பாடலை பாடி கேட்கணும், இல்ல ஹிந்தியில் பழைய இசையமைப்பாளர்கள் யாராச்சும் போட்ட பாடலை பாடி கேட்கணும், அத விட்டு நீ காரியத்தையே கெடுத்துருவ போல என நொந்து கொண்டாராம் ஏவிஎம் சரவணன். அதன் பிறகு அந்த பாடலை முடித்து மதிய வேளையில் மறுபடியும் இளையராஜா இவர்களை அழைத்தாராம்.


பாடலுக்கான சூழ்நிலை சொல்லு.இல்லைனா நீதான் ரிஃபெரன்ஸ் வச்சிருப்பீயே சொல்லு என கேட்டிருக்கிறார். உடனே ரவிக்குமார் ‘மாங்குயிலே பூங்குயிலே’னு இளையராஜா பாடலையே பாடி இப்படி ஒரு பாடல் வேண்டும் என கேட்டிருக்கிறார். ஏவிஎம் சரவணனுக்கு ஒரே சிரிப்பு. இருந்தாலும் இளையராஜா அதே மாதிரியான ஒரு பாடலை கொடுக்க அதுதான் ‘மல்லிகை மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே’ பாடல். இந்த பாட்டு பின்னாளில் சூப்பர் டூப்பர் ஹிட் என இந்த தகவலை ரவிக்குமார் கூறினார்.

Next Story