நான் முதலில் அழுதது அந்த ரஜினி படம் பார்த்து!.. லோகேஷ் ரொம்ப ஃபீல் பண்றாரே!...

by MURUGAN |
lokesh
X

Lokesh kanagaraj: மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இந்த படம்தான் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்களை உருவாக்கியது. ஒரு இரவில் நடக்கும் கதை. திரைக்கதையில் தீ பற்றியது போல பரபரக்க வைத்திருந்தார். இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுத்தது.

அதன்பின் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை கொடுத்தார் லோகேஷ். இந்த படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைத்திருந்தார். இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. விஜயை வைத்து படம் எடுத்ததால் மேலும் பிரபலமானார் லோகேஷ்.

அடுத்து ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு அமைந்து அது சரியாக அமையாமல் போக கமலை வைத்து விக்ரம் எடுத்தார். இது லோகேஷின் மாஸ்டர் பீஸாக அமைந்தது. அடிப்படையில் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். எனவே, கமலை மிகவும் ரசித்து ரசித்து இயக்கினார். ஹாலிவுட் பட ஸ்டைலில் வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.


அதன்பின் மீண்டும் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கினார். தமிழ் சினிமாவில் அதிக ஹைப் ஏற்றிய படமாக இப்படமே இருந்தது. பல மாதங்கள் இப்படம் பற்றியே எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், படம் வெளியான போது இரண்டாம் பாதி சரியாக அமையவில்லை. இதை லோகேஷும் ஒத்துக்கொண்டார்.

இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு பக்கா பேன் இண்டியா படமாக உருவாகி வருகிறது. சமீபத்தில் அளித்த பேட்டிகளில் ரஜினியை இயக்கி அனுபவம் பற்றி பேசி வருகிறார் லோகேஷ்.

ரஜினி சார் என்னிடம் ‘நான் பயங்கரமான நடிகர் இல்லை’ என சொன்னார். ஆனால், உண்மையில் அவர் பயங்கரமான நடிகர்.. அவரை அவ்வளவு ரசித்தேன் என சொல்லியிருந்தார். மேலும், முத்து படத்தில் ரஜினியை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றும் காட்சி வந்தபோது நான் அழுதேன். நான் முதன் முதலில் ஒரு சினிமாவை பார்த்து அழுதது அப்போதுதான் என நினைக்கிறேன். சீரியஸான சினிமாவை ரசிக்க துவங்கியபின் நான் கமல் சாரின் ரசிகனாக மாறினாலும், சிறு வயது முதல் எனக்கு பிடித்த நடிகராக ரஜினி சாரே இருந்தார்’ என சொல்லியிருக்கிறார்.

Next Story