கடும் சவால்களைச் சந்தித்த எம்ஜிஆரின் முதல் ஹீரோ படம்... ஆனா பட்டையைக் கிளப்பிடுச்சே..!

by Sankaran |
mgr
X

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ராஜகுமாரி. அந்தப் படத்தை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பி.யு.சின்னப்பாவை ஒப்பந்தம் செய்து தர தயாராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் சூப்பர்ஸ்டாராக இருந்தார் பியு.சின்னப்பா. அவரையேக் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்ய அந்தப் படத் தயாரிப்பாளர் தயாராக இருந்த போதும் எனக்கு பியு.சின்னப்பா எல்லாம் வேண்டாம்.

நலம் விரும்பி: எம்.ஜி.ராமச்சந்திரனே போதும். அவரை வைத்துப் படம் இயக்கித் தருகிறேன் என்றவர் தான் ஏஎஸ்ஏ.சாமி. அவர் அப்படி சொன்னதும் அந்த செய்தி இசை அமைப்பாளராக அந்தப் படத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த எஸ்எம்.சுப்பையாநாயுடுவின் காதிலே தேனாகப் பாய்ந்தது. ஏன்னா அவர் எம்ஜிஆரின் நலம் விரும்பி.

மகிழ்ச்சியான செய்தி: இந்தச் செய்தியை எம்ஜிஆரைப் பார்த்து உடனடியாக சொல்ல வேண்டும் என்று விரும்பினார். அடுத்த படத்திலே உன்னைக் கதாநாயகன் ஆக்கணும்னு ஏஎஸ்ஏ.சாமி முடிவு செய்திருக்கிறார் என்று. அந்த மகிழ்ச்சியான செய்தியை எம்ஜிஆரிடம் தெரிவித்தார். சுப்பையா நாயுடு அளவில்லாத ஆனந்தத்தோடு அந்த செய்தியைச் சொன்னார்.

கசப்பான அனுபவங்கள்: அப்போது எம்ஜிஆர் முகத்திலே ஒரு சின்ன மாற்றம்கூட இல்லை. அதற்குக் காரணம் சாயா என்ற படத்திலே எம்ஜிஆர் கதாநாயகனாக ஒப்பந்தமான முதல் படம். அந்தப் படத்திலே நடிக்க பல கசப்பான அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டன. கடைசியில அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையவும் இல்லை.


பல எதிர்ப்புகள்: உடனே சுப்பையா நாயுடு, 'உங்களுக்குத் தான் ஏஎஸ்ஏ. சாமியை நல்லா தெரியுமே. அவருக்கிட்ட கேட்டு இந்தச் செய்தியை உறுதிப்படுத்துங்கள்' என்றார். அதேபோல எம்ஜிஆரும் அவரிடம் கேட்க, அவரும் நீங்க தான் இந்தப் படத்தின் கதாநாயகன் என்றார்.

அப்போது பல எதிர்ப்புகள் வந்தாலும் எம்ஜிஆரைக் கதாநாயகன் ஆக்கி இந்தப் படத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார் ஏஎஸ்ஏ.சாமி. அந்தப் படத்தின் வெற்றி தான் எம்ஜிஆரைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடிக்க வைத்தது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Next Story