கொஞ்சம் விட்டா செவுட்டுலயே அறைஞ்சிருப்பாரு.. மனோபாலாவும் பாரதிராஜாவும் அறிமுகம் ஆனது இப்படித்தான்
பன்முகத்திறமை கொண்ட மனோபாலா:திரைத் துறையில் சில நடிகர்களை நாம் எப்பொழுதுமே அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அந்த வகையில் முக்கியமான நடிகராக கருதப்படுபவர் நடிகர் மனோபாலா. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் சினிமாவில் பல படைப்புகளை படைத்திருக்கிறார். ஒரு பன்முக த் தன்மை கொண்டவர் மனோபாலா. இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய புதிய வாழ்த்துக்கள் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் மனோபாலா.
என்ன ஒரு தைரியம்?:பாரதிராஜாவிடம் மனோபாலாவை அறிமுகம் செய்து வைத்ததே கமல் தான். கமலால் தான் எப்படி பாரதிராஜாவிடம் அறிமுகம் ஆனேன் என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் மனோபாலா. கமல் சொன்னார் என்பதற்காக பாரதிராஜாவின் அலுவலகத்திற்கு சென்று ‘எக்ஸ் கியூஸ் மீ பாரதிராஜா, உங்களிடம் வேலைக்கு சேர கமல் சார் என்னை இங்கே அனுப்பினார்’ என்று தான் ஆரம்பித்தாராம்.
கமலால் தப்பிச்ச மனோபாலா:உடனே பாரதிராஜா மேலும் கீழும் பார்த்துவிட்டு உள்ளே வாங்க என அழைத்திருக்கிறார். இதைப்பற்றி குறிப்பிட்டு பேசும்போது ‘கமல் சார் என்ற அந்த பெயர் மட்டும் அடிக்கோடிடவில்லை என்றால் செவுட்டுலேயே அறைந்திருப்பார் பாரதிராஜா’ என மனோபாலா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கே ஒரு படம் சம்பந்தமான விவாதம் நடந்து கொண்டிருந்ததாம்.
அந்த படத்தின் கதையை முதலில் கேளுங்கள் என பாரதிராஜா மனோபாலாவிடம் சொல்லி இருக்கிறார். கதையை கேட்டு விட்டு வெளியே வந்த மனோபாலா பாரதிராஜாவிடம் இந்த கதையை ஏன் தேர்வு செய்கிறீர்கள். படம் கண்டிப்பாக ஓடாது என கூறினாராம் மனோபாலா. வந்த முதல் நாளே இப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருக்கிறார். இருந்தாலும் மனோபாலாவின் அந்த தைரியம் பாரதிராஜாவிற்கு பிடித்திருந்தது.
இப்படித்தான் இவர்களின் அறிமுகம் நடந்திருக்கிறது. இப்படி ஒரு சில படங்களில் பாரதிராஜாவுடன் பணியாற்றிய மனோபாலா ஆகாய கங்கை என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் அந்த படம் பாக்ஸ் ஆபீஸ் தோல்வி அடைந்தது. அதன் பிறகு பிள்ளை நிலா என்ற படத்தை இயக்கி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் மனோபாலா இயக்கியிருக்கிறார். அதன் பிறகு நடிகராக விவேக் மற்றும் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.