பாடலுக்கான காட்சியே படத்துல இல்ல.. அப்படியிருந்தும் சூப்பர் ஹிட்டான இளையராஜாவின் பாடல்

by Rohini |   ( Updated:2025-02-06 01:30:48  )
ilaiyaraja
X

18 பாடல்கள்: சமீப காலமாக பெரும்பாலான படங்களில் பாடல்கள் என்பது மிக மிக குறைவாகத்தான் இருக்கின்றது. ஆரம்ப காலங்களில் ஒரு படம் என்றால் ஐந்து பாடல்கள் அல்லது ஆறு பாடல்கள் கண்டிப்பாக இருக்கும் .அதற்கு முந்தைய காலம் சென்றால் ஒரு படத்திற்கு 18 பாடல்கள் கூட இடம்பெற்று இருக்கின்றது .ஆனால் சமீபகாலமாக இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெறுகின்றன.

மண்வாசனை: அதனாலேயே பாடல்களின் மீதுள்ள வரவேற்பும் குறைந்து வருகின்றது. ஏன் சமீபகாலமாக படங்களின் பாடல்கள் சரியான வரவேற்பை பெறுவதில்லை என சித்தா லட்சுமணன் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் மண்வாசனை. பாண்டியன் மற்றும் ரேவதி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

5 பாடல்கள்: அதற்கு இன்னொரு காரணமாகவும் அமைந்தது இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள். மாலை 6:00 மணிக்கு பாடல்களுக்கான பதிவு ஆரம்பித்திருக்கிறார் இளையராஜா. 9 மணிக்குள் 5 பாடல்களையும் ரெக்கார்டிங் செய்து முடித்து விட்டாராம். அதில் ஒரு பாடல் தான் அரிசி குத்தும் அக்கா மகளே என்ற பாடல் .ஆனால் படத்தில் அந்த பாடலுக்கான காட்சியே கிடையாதாம்.

சரி இளையராஜா போட்டுவிட்டார் என்பதற்காக படத்தில் சேர்க்க முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் எந்த இடத்தில் சேர்ப்பது என்றுதான் புரியவில்லை. இருந்தாலும் பாரதிராஜா அந்தப் பாடலுக்கான சரியான இடத்தை தேர்வு செய்து அந்த பாடலை பொருத்தி இருக்கிறார். பின்னாளில் அந்தப் பாடல் எப்பேர்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரியும் .

இப்படித்தான் இப்போதுள்ள இயக்குனர்கள் பாடல்களை சரியான இடத்தில் பொருத்துவதில்லை. அதனால் தான் பாடல்களும் அதிக அளவில் வரவேற்பையும் பெறுவதில்லை என சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார் .ஒரு பாடலுக்கு என சரியான இடம் கண்டிப்பாக வேண்டும். அதை இயக்குனர்கள் சரியான விதத்தில் பொருத்திப் பார்த்தால்தான் பார்க்க வரும் ரசிகர்களுக்கும் ஒருவித ஈர்ப்பை ஒரு வித ரசனையை ஏற்படுத்தும். அது மிஸ் ஆகும் சமயத்தில்தான் பாடல்களின் வெற்றி என்பது உறுதி இல்லாமல் போகிறது.

Next Story