ஹாலிவுட் நடிகை கூட இப்படி பந்தா காட்டல... எம்ஜிஆரே அசந்துட்டாரே!

நடிகையர் திலகம் சாவித்திரி நடிப்புக்காகவே ரசிகர்களைக் கவர்ந்தார். நாட்டியப் பேரொளி பத்மினி நடனத்தால் ரசிகர்களை வசீகரித்தார். அபிநய சரஸ்வதி சரோஜா தேவியைப் பற்றி சொல்லவே வேண்டாம். துருதுருப்பான பேச்சும் நடிப்பும்தான் அவரது பலம். புன்னகை அரசி என்றால் அது கே.ஆர்.விஜயா தான்.
எப்போதும் புன்னகையோடு இருப்பதால் கே.ஆர்.விஜயாவை புன்னகை அரசி என்றார்கள். ஆனால் இந்தப் புன்னகைக்குப் பின்னாலும் சோகம் இருந்தது. வாங்க பார்க்கலாம்.
1963ல் சினிமாவுக்கு நடிக்க வந்தார் கே.ஆர்.விஜயா. அதற்கு முன்பே பழனி பகுதியில் இருந்தபோது நாடகங்களில் நடித்தார். அப்போது நாடகத்துக்காக வந்த எம்.ஆர்.ராதா அவர் நன்றாக நடிக்கிறார். சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்று நினைத்தார். அவரது தெய்வநாயகி என்ற பெயரை 'கே.ஆர்.விஜயா' என்று மாற்றினார்.
சினிமாவுக்காக அவரது போட்டோவைப் போட்டு போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்தாராம். அப்படி அவருக்கு தேடி வந்ததுதான் கற்பகம் என்ற சினிமா வாய்ப்பு. முதல் படத்திலேயே ஜெமினிகணேசனுக்கு ஜோடியானார்.
அப்போது அவரது வயது 13. தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜியுடன் கூட ஜோடியாக படங்களில் நடித்தார். படப்பிடிப்பில் பிரச்சனை வராது. கால்ஷீட்டில் பிரச்சனை வராது. எந்த சாமி படமாக இருந்தாலும் விரதம் இருந்து கோவில் குளத்தில் குளித்து ஈரப்புடவையுடன் அங்கப்பிரதட்சணம் செய்து விட்டு அர்ச்சனை செய்தபின்தான் முதல் காட்சியில் நடிப்பார்.
கேரளாவின் சிட்பண்ட்ஸ் நிறுவனரான வேலாயுதம் நாயர் அவருக்குப் பழக்கம் ஏற்பட காதலில் விழுந்தார். 1966ல் இவர்களது திருமணம் நடந்தது. ஆனால் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அப்போதே சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்து இருந்தாராம்.
ஊட்டியில் நல்ல நேரம் படப்பிடிப்பு நடந்தது. அப்போது எம்ஜிஆர் காரில் தான் சென்றாராம். ஆனால் கே.ஆர்.விஜயா சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்திலும், அங்கிருந்து ஊட்டிக்கு ஹெலிகாப்டரிலும் சென்றாராம். அப்போது ஊட்டியில் உள்ள ஓட்டல் அறையில் தான் எம்ஜிஆரே தங்குவாராம்.
ஆனால் கே.ஆர்.விஜயாவை ஹெலிகாப்டரில் கோவைக்கு அவரது கணவர் அழைத்து வந்து தங்க வைப்பாராம். மீண்டும் காலையில் ஹெலிகாப்டரில் ஊட்டிக்குச் சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். இப்படி ஹாலிவுட் நடிகை மாதிரி பந்தா காட்டியவர் தான் கே.ஆர்.விஜயா.
திருமணம் முடிந்தபிறகு சினிமாவில் இருந்து விலக முடிவு செய்தாராம். ஆனால் 'நீ வீட்டில் இருந்தால் சோம்பேறி ஆகி விடுவாய். அதனால் சினிமாவுக்குப் போ' என்று சொல்லி விடுவாராம். கணவரின் பெருந்தன்மை கே.ஆர்.விஜயாவுக்கு சந்தோஷமாக இருந்ததாம். ஆனால் இதற்குப் பின்னால் பெரிய காரணம் இருந்ததாம்.
வேலாயுதம் செய்து வந்த வேலைகளில் சுங்கத்துறை, வருமான வரி அதிகாரிகள் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்து வந்தார்களாம். அதனால் அவர்களை சரிகட்ட அவர்களுக்குப் பார்ட்டி கொடுப்பாராம். அப்போது அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் தேவைப்பட்டதாம்.
அதனால் தான் கே.ஆர்.விஜயாவைத் திருமணம் செய்தாராம். குழந்தை பிறந்தபிறகும் கூட சினிமாவை நிறுத்தி விடுகிறேன் என கே.ஆர்.விஜயா சொல்ல வேலாயுதமோ நான் கவனித்துக் கொள்கிறேன். நீ சினிமாவில் தொடர்ந்து நடின்னு சொன்னாராம். கே.ஆர்.விஜயா சம்பாதித்த பணத்தைக் கூட 'உன் பணம் எனக்கு வேண்டாம். நீ ரியல் எஸ்டேட்டில் அதை முதலீடு செய்' என்று அவரையும் உள்ளே நுழைத்து விட்டாராம். அதனால் தான் புன்னகை அரசியாகவே கே.ஆர்.விஜயா திகழ்ந்தார் என்கிறார்கள்.