தன்னை திட்டிய நடிகரை அழவைத்த எம்.ஜி.ஆர்!.. கொடைவள்ளல் இப்படிப்பட்டவரா?!..

by MURUGAN |   ( Updated:2025-05-17 09:00:32  )
mgr
X

எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் உதவும் குணம் கொண்ட ஒரு மனிதராகவே கடைசிவரை இருந்தார். தன்னால் முடிந்தவரை தன்னை சுற்றியுள்ள, தன்னிடம் உதவி கேட்ட, தனக்கு தெரிந்த, தன்னுடன் பழகிய பலருக்கும், பல வழிகளிலும் உதவியிருக்கிறார். இதுபோக பொதுமக்களுக்கும் பலருக்கும் அவர் செய்த உதவிகள் ஏராளம்.

இது ஒருபுறம் எனில் தன்னைப் பற்றி தரக்குறைவாக பேசியவர்கர்களுக்கும், தவறாக விமர்சனம் செய்தவர்களுக்கும் அவர் உதவியிருக்கிறார். சினிமா உலகில் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்தவர் கண்ணதாசன். ஏனெனில், காமராஜர் காங்கிரஸ் ஆதரவாளர். எம்.ஜி.ஆரோ திமுகவில் இருந்தார். எனவே, அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆரை கண்ணதாசன் விமர்சித்தார்.

ஆனால், எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த நேரத்தில் தமிழக அரசவைப்புலவராக நியமித்து கவுரவப்படுத்தினார். அதேபோல், சந்திரபாபுவை வைத்து ஒரு படத்தை தயாரித்து அதுவரை சினிமாவில் சம்பாதித்த பணம், சொத்துக்களை இழந்தார். அதோடு, கடனாளியாகவும் மாறினார். கண்ணதாசனின் வீடு ஒன்று ஜப்தி ஆக இருந்த நிலையில் எம்.ஜி.ஆர்தான் அதை மீட்டுக் கொடுத்தார்.


அதேபோல், சினிமா உலகில் எம்.ஜி.ஆரை எப்போதும் நக்கலடித்து பேசியவர் காமெடி நடிகர் சந்திரபாபு. தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் யார்? என ஒருமுறை ஒரு செய்தியாளர் கேட்டதற்கு ‘நான்தான்’ என பதில் சொன்னார். ஆனால், அதே சந்திரபாபு சினிமாவில் படங்களை தயாரித்து கடனாளியாக மாறி மிகவும் கஷ்டப்பட்டார்.

சினிமாவில் வாய்ப்புகளெல்லாம் போய் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதெல்லாம் நடந்தது. எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான உறவிலும் விரிசல் ஏற்பட்டது. குடிக்கு அடிமையாகி சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அவரின் நெருங்கிய நண்பர்களும் அவரை கைவிட்டார்கள். அப்போது கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. கிறிஸ்துவரான சந்திரபாபுவுக்கு கிறிஸ்துமஸை கொண்டாட கூட பணம் இல்லை.

அப்போது எம்.ஜி.ஆரின் மேனேஜர் சந்திரபாபு வீட்டுக்கு வந்து எம்.ஜி.ஆர் கொடுத்து அனுப்பியதாக சொல்லி ஒரு வாழ்த்து மடலை கொடுத்தார். அந்த வாழ்த்துமாடலை சந்திரபாபு பிரித்துபார்த்தபோது அதில் 5 ஆயிரம் பணம் இருந்தது. அதுவரை எம்.ஜி.ஆரிடம் பேசாமல் இருந்த சந்திரபாபு உடனே அவருக்கு போன் செய்தார். மறுமுனையில் பேசிய எம்.ஜி.ஆர் ‘பாபு உங்கள் பிரச்சனை எனக்கு தெரியும். பறக்கும் பாவை படத்தில் உங்களை ஒப்பந்தம் செய்திருக்கிறேன். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம். நாளை முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் உங்களிடம் கொடுப்பார்கள். அதை வாங்கிக்கொண்டு கிறிஸ்துமஸையும், புது வருடத்தையும் நன்றாக கொண்டாடுங்கள்’ என சொல்ல சொல்ல சந்திரபாபு எதுவும் பேச முடியாமல் நா தழுக்க நின்று கொண்டே இருந்தார். அவர் சொன்ன ஒரே வார்த்தை ‘தேங்க் யூ மிஸ்டர் ராமச்சந்திரன்’

Next Story