வில்லன் நடிகருக்காக எம்ஜிஆர் செய்த செயல்... அதனாலதான் அவருக்கு இவ்ளோ மாஸா?
மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்றைக்கும் மக்கள் மனதில் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்றால் அதுக்கு முக்கியமான காரணம் அவரது நல்ல நல்ல பண்புகள்தான்.
காவல்காரன் படத்துக்காக ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட இருந்தது. அதுக்கான ஒத்திகை சத்யா ஸ்டூடியோவில் நடந்தது. அந்த ஒத்திகையில் கலந்து கொண்ட போது கவர்ச்சி வில்லன் கே.கண்ணன் என்பவருக்கு விபத்து ஏற்பட்டது. அவரால காலைத் திருப்பவே முடியலை. இந்த சம்பவம் நடைபெற்ற போது எம்ஜிஆர் இன்னொரு படத்துக்காக வாஹிணி ஸ்டூடியோவில் இருந்தார்.
இப்படி ஒரு சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் எம்ஜிஆர் காரை எடுத்துக் கொண்டு நேராக சத்யா ஸ்டூடியோவுக்குப் போனார். அப்போது அங்கு வந்து கண்ணனுடைய உடல்நிலையை விசாரித்தார். இவரது உடல்நிலை சரியாகும் வரை இந்தப் படப்பிடிப்பை நடத்த வேண்டாம். அது 10 நாளானாலும் சரி. 15 நாள்களானாலும் சரின்னு அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனிடம் சொல்லி விட்டார்.
அன்றைய தினம் பார்த்தால் அவன் ஒரு சாதாரண நடிகன். இவரை உடனடியாக மாற்றி விட்டு கூட படப்பிடிப்பை நடத்தி இருக்கலாம். ஆனால் எனக்காக பத்து பதினைந்து நாள்கள் காத்திருந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லி படப்பிடிப்பைத் தள்ளி வைத்துள்ள மாபெரும் மனிதர் தான் எம்ஜிஆர். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
அசோகன், நம்பியார், வீரப்பா, மனோகருக்குப் பிறகு பிரபல வில்லனாக வந்தவர் தான் கே.கண்ணன். ஆரம்பத்தில் இவர் தீவிர எம்ஜிஆர் ரசிகராகத் தான் இருந்தார். அதன்பிறகு அந்த ரசிகர் மன்றத்தில் பொருளாளராக இருந்தார். எம்ஜிஆருடன் மதுரை வீரன் என்ற படத்தில்தான் முதன் முதலாக நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து அவரது கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை எம்ஜிஆருடன் இணைந்து நடித்துவிட்டார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப் பொருத்தவரை அவர் படத்தில் மட்டும் புரட்சி பண்ணவில்லை. நிஜ வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவங்களின் மூலமாக நிறைய புரட்சி பண்ணியுள்ளார் என்பதே உண்மை.