நீங்க சிவாஜியைத் தாக்கிப் பேசினீர்களா? நிருபரின் கேள்விக்கு நெத்தி அடி பதில் கொடுத்த எம்ஜிஆர்!

by Sankaran |
mgr, sivaji
X

ஒரு கால கட்டத்தில் தென்னிந்திய திரைப்பட பத்திரிகையாளர்கள் எல்லாம் சேர்ந்து எம்ஜிஆருக்குப் பாராட்டு விழாவை நடத்தினர்.

அந்தப் பாராட்டு விழாவில் பேசும்போது 'எதிர்காலத்திலே மிகையான நடிப்புக்கு வரவேற்பு இருக்காது. இயற்கையான நடிப்புக்குத் தான் வரவேற்பு இருக்கும்' என்று எம்ஜிஆர் பேசினார். அதன்பிறகு சிவாஜிகணேசனைத் தாக்கித்தான் எம்ஜிஆர் அப்படிப் பேசிருக்காருன்னு பல பத்திரிகைகள் விமர்சிக்கத் தொடங்கின.

அதைப் பற்றி எம்ஜிஆரிடம் கேட்டபோது 'எதிர்காலத்திலே மிகையான நடிப்புக்கு வரவேற்பு இருக்காது. இயற்கையான நடிப்புக்குத்தான் வரவேற்பு இருக்கும்னு நான் சொன்ன உடனே ஏன் சிவாஜிகணேசனை நினைவுபடுத்திக் கொள்கிறீர்கள்?

திறமையைக் களங்கப்படுத்தாதீங்க: அப்படின்னா உங்க பார்வையிலே சிவாஜிகணேசன் மிகையான நடிப்பை நடிக்கிறாரா? இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டு என் மீது கறை பூசணும்னு நீங்க நினைச்சீங்கன்னா நீங்கதான் தோத்துப்போவீங்க. இப்படிப் பேசி அற்புதமான நடிகரான தம்பி கணேசனுடைய திறமையைக் களங்கப்படுத்தாதீங்க'ன்னு அந்த நிருபருக்குப் பதில் சொன்னார் எம்ஜிஆர்.

விட்டுக் கொடுத்ததில்லை: அந்தவகையில் எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும் தொழில்முறையில் போட்டி இருந்தாலும் எந்தக்காலத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததில்லை என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.


இப்படி ஒரு கேள்வி: சிவாஜி ஒரு சில படங்களில் மிகையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அது அந்தக் கேரக்டருக்கு மெருகூட்டும் என்பதற்காகவே இருக்கும். அதையே பத்திரிகையாளர்கள் தவறாகப் புரிந்து கொண்டு இப்படி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்கள். ஆனாலும் எம்ஜிஆர் எந்தவித டென்ஷனும் ஆகாமல் சமயோசிதமாக பதில் சொன்னது பாராட்டுதலுக்குரியது.

படங்களுக்குள் போட்டி: சிவாஜியும், எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. அந்தப் படத்தின்போது திரையரங்கில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டதால் அதன்பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என முடிவு செய்தனர். இருந்தாலும் இருவரது படங்களும் போட்டி போட்டுக் கொண்டு ரிலீஸ் ஆகும்.

நெருங்கிய நண்பர்கள்: ரசிகர்கள் வழக்கம்போல பேனர்கள், கட் அவுட்கள் என்று வைத்துக் கொண்டாடுவர். சிவாஜியின் படங்கள், எம்ஜிஆர் படங்களுக்குள் தான் போட்டி இருக்கும். ஆனால் அவர்களது தனிப்பட்ட விஷயத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒருவரை ஒருவர் எந்த தருணத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

Next Story