நாகேஷைப் பார்த்து அந்தமாதிரி கேட்ட கண்ணதாசன்... அப்புறம் நடந்ததுதான் டுவிஸ்ட்!

கண்ணதாசன் பற்றி நாகேஷ் நிகழ்ச்சி ஒன்றில் இப்படி பேசியுள்ளார். இதைப் பார்க்கும்போது என்ன ஒரு அனுபவம்? நகைச்சுவை நடிகர் இவ்வளவு நயமாகப் பேசுகிறாரேன்னு ஆச்சரியப்பட வைத்தது. அவர் பேசியதில் இருந்து சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
நெருங்கிய பழக்கம்: எனக்கும் கவிஞருக்கும் நெருங்கிய பழக்கம் உண்டு. ரொம்ப சாதாரணமா பேசுவாரு. 'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்கிற பாடலை எழுதும்போது என்னைக் கூப்பிட்டாரு. மெட்ராஸ் பற்றி ஏதாவது உன்னோட கருத்தைச் சொல்லுன்னாரு. நான் சொன்னேன். அதை ரெண்டே லைன்ல பாட்டைக் கொண்டு வந்துட்டாரு.
வெள்ளரிக்காய் பச்சடி: ஒருமுறை சாப்பாடு அவருக்கு வந்தது. அவரு கேரியரைத் திறந்தாரு. நானும் திறந்தேன். அப்போ வெள்ளரிக்காய் எல்லாம் போட்டு பச்சடி இருந்தது. எங்கிட்ட கவிஞர் கேட்டாரு. 'ஏன்டா நாகேஷ்? இவ்ளோ சம்பாதிக்கிறீயேடா... சனியன் புடிச்சவனே... இதை மாதிரி எல்லாம் உன் வீட்டுல வருதா?'ன்னு கேட்டாரு கண்ணதாசன்.
300 கோடி சம்பாதிச்ச மாதிரி: சத்தியமா சொல்றேன். சாப்பாட்டு விஷயத்துல ஏதாவது சொல்லிட்டாங்கன்னா என்னால தாங்கவே முடியாது. நான் பட்டினியா கிடக்கும்போது எல்லாம் ஜெயிச்சிருக்கேன் 10 நாள் வரைக்கும் ஒண்ணும் சாப்பிடாம இருந்துருக்கேன் என்கிறார் நாகேஷ். அப்புறம் 'சார்...'னுட்டு டிபனைத் திறக்குறேன். அதே மாதிரி பச்சடி இருந்தது. ஏதோ 300 கோடி சம்பாதிச்ச மாதிரி ஒரு சந்தோஷம் எனக்கு.
மோர்க்குழம்பு: அதே மாதிரி சந்தோஷத்தோடு வீட்டுக்கு வந்தேன். மோர்க்குழம்பு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. எப்படி வைஃப்கிட்ட கேட்குறதுன்னு இருந்தேன். 'என்ன சாப்பிட உட்காரலையா? உனக்குன்னு ஒண்ணு பண்ணிருக்கேன். மோர்க்குழம்பு பண்ணிருக்கேன். வேணுமா?'ன்னு வீட்டம்மா கேட்டாங்க.
தீர்க்கதரிசி: அப்போ தான் புரிஞ்சது. என்ன அனுபவம் இருந்தா ஒரு கவிஞன் 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்'னு எழுதிருக்காரு. எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியா இருக்கான்? என்ன அனுபவம் இருக்கணும்?
அதே போல 'கண்ணின் இமைகள் அருகில் இருந்தும் கண்கள் இமையைப் பார்த்ததில்லை'ன்னு எழுதிருக்காரு. நம்ம எதைச் சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறோமோ அது ஊரு முழுக்கத் தெரிஞ்சிடுது. யார்றான்னா கிட்டேயே இருக்கான். அதுதான் அதுக்கு விளக்கம்.
அதே மாதிரி எனக்குப் பிடிச்ச பல்லவிலேயே கவிஞர் எழுதுனது 'பிள்ளைக்குத் தந்தை ஒருவன். நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்'னு சொன்னாரே. இது மாதிரி ஒரு பல்லவியை நான் பார்த்ததே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.